ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

 


அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் 

என் மனமும் சேர்ந்து அதிர்கிறது...

என்றோ குடியின் காரணமாக விட்டு விலகிய மனைவி குழந்தைகள் 

வேறு நகரத்தில் வசிக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டது...

கணவனின் இறுதி சடங்கில் 

பங்கேற்ற மனைவி குழந்தைகள் அடுத்த நாளே 

எல்லா சடங்கும் முடித்து 

சென்று விட 

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல் பேரமைதி கொண்ட அந்த வீடு தான் இன்று இடிக்கப்படுகிறது...

அந்த வீட்டின் மனிதர்கள் 

ஒரு காலத்தில் கூடி குலாவி 

மகிழ்ந்த தருணங்கள் எல்லாம் வெறும் சுவர் இடிந்த அந்த மண் துகள்களுக்குள் புதைக்கப்படும் ஓசையில் 

அந்த மனிதர்களின் உணர்வுகளை நினைத்து விம்மி அழும் என் மனதிற்கு 

ஆறுதல் எங்கே என்று தான் தெரியவில்லை...

இன்னும் சில நாட்கள் 

இதன் தாக்கம் இருந்து விட்டு 

காலத்தின் லீலையால் 

அழியதான் போகிறது என்று 

தெரிந்தாலும் 

இதோ இப்போது இடிக்கப்படும் ஓசையில் 

அதிரும் என் மனதிற்கு 

ஆறுதல் யார் தரக் கூடும்?

அறமற்ற அரசாங்கத்தின் 

கொள்கை முடிவில் 

இங்கே புதைக்கப்படும் 

பல மனிதர்களின் 

கனவுகளின் சாபத்தை 

அதை நடத்தும் அரசாங்கம் 

உணரும் நாளில் 

இங்கே ஒரு தலைமுறையே 

மலை போல புதைக்கப்பட்டு 

அங்கே அதன் மேலே சிரித்துக் கொண்டு இருக்கும் மண்டை ஓட்டின் பயத்தில் உயிர் பயம் தொடர இறப்பை விரும்பி அழைக்கும் தலைவனுக்கு 

அருகில் இருக்கும் தொண்டர்களால் கூட ஆறுதல் சொல்ல இயலவில்லை...

#அந்த #ஒற்றை #மனிதனின்

#இறுதி #பயணம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/09/24/சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...