ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

அந்த வேடிக்கை மனிதர்களும் விசித்திர காக்கையும்...


வாழ்வின் நிலையாமை 

விளிம்பில் சக்கையாக 

பிழியப்பட்டு தூக்கி வீசப்பட்ட 

கரும்பை போல 

உணர்வுகளற்ற நிலையில் 

அந்த பரபரப்பான சாலையில் 

ஓடிக் கொண்டிருக்கும் 

வேடிக்கை மனிதர்களை 

சுவாரஸ்யமாக கா கா என்று 

கத்தி கூப்பாடு போட்டு 

கேலி செய்கிறது அந்த ஒரு விசித்திரமான காக்கை!

அந்த சத்தத்தை கேட்டு விட்டு 

அந்த குடியிருப்பில் வசித்து வரும் நடுத்தர வயதுடைய பெண்மணி மூச்சு வாங்க படியேறி கொஞ்சம் சோறு எடுத்து வந்து அந்த கான்கிரீட் தளத்தின் ஒரு மூலையில் வைப்பதை பார்த்து விட்டு 

மீண்டும் கீழே அந்த சாலையில் 

நடக்கும் வேடிக்கை மனிதர்களை பார்த்து கா கா என்று கரைந்து கூப்பாடு போட்டு விட்டு நிதானமாக 

அந்த சோறை சாப்பிட்டு விட்டு 

ஒரு பருக்கையை அங்கே அந்த சாலையை நோக்கி கீழே மேலிருந்து 

நழுவ விடுகிறது...

அந்த சோற்று பருக்கை ஒட்டிக் கொண்ட மேலாடையினூடே 

அந்த மனிதர் தமது வாகனத்தில் பயணம் செய்கிறார் எந்த உணர்வுகளும் இன்றி...

பெரும் நிகழ்வுகளையே

உணர்வற்று பயணிக்கும் வேடிக்கை மனிதர்களுக்கிடையே

இந்த இலேசான சோற்று பருக்கை ஏதாவது அதிர்வை ஏற்படுத்தி விடும் என்று 

நம்பி கேலி செய்யும் 

அந்த காக்கைக்கு இது தெரியாமல் இருப்பதே ஒரு வரம் அல்லவா...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/08/25/புதன்கிழமை

அந்த தேநீர் கோப்பையும் விடியலும்...


உருண்டோடும் காலத்தில் 

சிக்கி சின்னாபின்னமாகி 

கிடக்கும் பொழுதை 

கொஞ்சம் 

ஆசுவாசப்படுத்திக் கொள்ள நீ என் கையில் 

இருக்கிறாய்...

உன் சூட்டின் ஆவி 

என் நாசியை நனைத்து 

உயிர் வரை சென்று 

களிப்படைய செய்து 

அத்தனை இன்னல்களையும் 

ஒதுங்கி நின்று ஆச்சரியமாக வேடிக்கை பார்க்க வைத்து 

மிடறு மிடறாக பருகும் 

அந்த தேநீர் எனும் உற்சாக பானத்தின் கோப்பையில் 

என் உலகம் உற்சாகமாக 

நிகழ்த்தி காட்டி களிக்க வைக்கிறது...

இந்த விடியலின் ஆரம்ப புள்ளியின் அடிச்சுவடில்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/08/25/புதன்கிழமை.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

சராசரி கிறுக்கர்களுக்கிடையே வாழ்ந்து விடுவது அவ்வளவு எளிதல்ல..


தினமும் எதையோ நினைத்து 

ஓடிக் கொண்டிருக்கும் 

அந்த சராசரி கிறுக்கர்களுக்கிடையே 

வாழ்ந்து விடுவது 

அவ்வளவு எளிதல்ல!

அவர்களை அப்படியே 

ரசித்து வேடிக்கை பார்த்து 

அவர்கள் நிலையையும் 

என் நிலையையும் ஒப்பிட்டு 

எதையோ எனது தாள்களில் 

கிறுக்கி ஆறுதல் தேடிக் கொண்டு அந்த காலத்தின் நிழலில் கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டு 

நான் பாட்டுக்கு சாலையில் போவோர் வருவோரை பார்த்துக் கொண்டே 

எதையோ ரசித்து 

ஹம் செய்து கொண்டு 

மன சாந்தி அடைகிறேன் 

இதையும் அங்கே பல வாழ்வை புரிந்துக் கொண்டதை போல நடித்து 

பேய் போல திரிந்துக்கொண்டிருக்கும் 

கிறுக்கர்கள் எனை பைத்தியம் என்று சொல்லி நகைக்கும் போது தான் கோபத்திற்கு பதிலாக பலம் கொண்ட மட்டும் சத்தமாக நான் சிரித்து வைத்ததில் அந்த காலமே 

அதிர்ந்து எனை நோக்கி ஓடோடி வந்து என் காலடியில் வீழ்ந்தது!

#சராசரி #கிறுக்கர்கள்

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/08/25/சனிக்கிழமை.

இந்த பிரபஞ்சத்தில் ஒட்டிக் கொண்டு இருந்த பாசத்தின் சுவடை உணர்ந்துக் கொண்டு...


நீரோடே ஓடி  எதை பற்றியும் கவலைப்படாமல் பயணம் செய்யும் அந்த நதியின் வழியில் 

எனது பயணமும் நிச்சலனமாக எந்தவொரு ஆராவாரமும் இல்லாமல் தொடர்கிறது...

அதோ அங்கே பறந்துக் கொண்டே கீழே ஓடும் நதியில் இறங்கி தனது தாகத்தை தீர்த்துக் கொண்டு 

தனது சிறகினிலே ஒட்டிக் கொண்டு இருந்த நீர் திவலையை உதிர்த்து ஆசீர்வாதம் செய்து விட்டு எட்டி பறக்கும் அந்த பறவையை போல நானும் என்னோடு 

சிறிது தூரம் பயணம் செய்த மக்களுக்கு எனது ஆதரவான பேச்சின் மூலம் ஆறுதல் சொல்லி விட்டு நிதானமாக அந்த பறவையையும் அந்த நதியையும் சிறிது புன்னகையோடு பார்த்து விட்டு 

பயணிக்கும் வேளையில் 

அங்கே சூரியன் தனது மெல்லிய கிரணங்களால் எனக்கு விடை கொடுத்து விட்டு 

மெல்ல மெல்ல மறைகிறது...

அங்கே அந்த மரத்தின் கிளையில் சில குருவிகளின் 

ஓசையில் நானும் ஆனந்த பரவசத்தில் மூழ்கி அந்த சாலையில் மெதுவாக நடக்கிறேன்...

இந்த பிரபஞ்சத்தில் எங்கோவொரு மூலையில் இன்னும் 

ஒட்டிக் கொண்டு இருக்கும் பாசத்தின் சுவடை உணர்ந்துக் கொண்ட ஒரு அபூர்வ மனிதனின் சாயலில்...

#இளையவேணிகிருஷ்ணா

நாள்:23/08/25/சனிக்கிழமை.

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

தூய்மை பணியாளர்களின் துயரம்...

 


இன்றைய தலையங்கம்:-

தூய்மை பணியாளர்களின் துயரம்:-

கலைஞர் இருந்து இருந்தால் இந்த மாதிரி மோசமான அடாவடித்தனம் நடந்து இருக்காது... முதலில் முதலமைச்சர் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சொல்வதற்கு கூட ஒரு மனிதர் வேண்டும் என்கின்ற நிலையில் இருக்கிறார் என்றால் அங்கே யோசனை சொல்பவர்களை அல்லது முதலமைச்சரை தவறாக நடத்துபவர்களை அந்த பதவியிலிருந்து விலக்க வேண்டும்...

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... 

இந்த மாதிரி நடந்து கொள்வது ஒரு அரசாங்கத்தின் நன்மதிப்பை கெடுக்கும் என்ற குறைந்தபட்ச ஞானம் கூட இல்லாமல் ஒரு அரசாங்கம் செயல்படுகிறது என்று எடுத்துக் கொள்வதா அல்லது அடித்தட்டு தொழிலாளர்களை இப்படி தான் நடத்துவோம் என்று எடுத்துக் கொள்வதா மக்கள் என்ற கேள்வி எழுகிறது அல்லவா... அனைவருக்குமான அரசு என்று அடிக்கடி சொல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின் இது தான்அனைவருக்குமான அரசா என்று சாதாரண குடிமக்கள் கூட கேள்வி கேட்பார்களே அப்போது என்ன இந்த அரசாங்கம் பதில் சொல்லும்? சமத்துவம் சமநீதி எல்லாம் மேடை நாடகமா என்று எண்ணத் தோன்றுகிறது நடக்கும் நிகழ்வுகள் அப்படி தான் உள்ளது... விழிப்புணர்வு அவசியம்...

#தூய்மைபணியாளர்களின்

#துயரம்

#இன்றையதலையங்கம்.

இளையவேணி கிருஷ்ணா.

நாள் 14/08/25/வியாழக்கிழமை.

புதன், 13 ஆகஸ்ட், 2025

வாழ்வின் அற்புதமான நிலை 🎉


வணக்கம் நேயர்களே 🎉🙏🎻.

வாழ்வின் அற்புதமான நிலை பற்றி சூபி தத்துவம் வாசித்தால் தங்களுக்கு புரியும்..

அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் சூபி ஞானி தத்துவத்தை தான் பதிவேற்றம் செய்து இருக்கிறேன்.. நிகழ்ச்சி கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி நேயர்களே 🎉 🙏 🎻.

https://youtu.be/VFfxdKPuJUM?si=zR8JM93klmlDPx3f

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

விவசாயிகளின் கண்ணீர் மழைநீரில் கரைகிறது...

 


#இன்றையதலையங்கம்:-

ஒரு அரசாங்கம் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற தெளிவு இல்லை என்றால் அந்த அரசாங்கம் இருந்தும் மக்களுக்கு பயனில்லை.. எத்தனையோ டாஸ்மாக் கடைகளை திறந்து மக்களின் உயிரை பறிக்கும் அரசாங்கம் மக்களின் உயிரை இந்த மண்ணில் நிலைநாட்ட மண்ணோடு மண்ணாகி போராடி நெல்மணிகளை தனது வியர்வை சிந்தி விளைவித்து அரசாங்கத்தின் கொள்முதலுக்காக கொண்டு வந்தால் ஈரப்பதத்தை காரணம் காட்டி இப்படி மழையில் நனைய விட்டு விவசாயியின் உழைப்பையும் பசியை தீர்க்கும் அமுதமான நெல்மணியினையும் அவமானம் செய்வது மக்களின் பசியை ஒரு பொருட்டாக கவலைக் கொள்ளாமல் இருப்பது தானே பொருள்... நெல்மணிகளை கொள்முதல் செய்து பாதுகாக்க கட்டிடம் கட்ட வேண்டும் தோன்றவில்லை... ஆனால் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சுதந்திர தின கொடியை ஏற்றி வீர வாசனங்களை நாளை மறுநாள் பேசுவார்கள்... இது தான் மாபெரும் விவசாய தொழிலை செய்து வரும் விவசாயிகளுக்கு அவர்கள் கொடுக்கும் பரிசு... எந்த ஒரு நாடு விவசாயியை மதிக்காமல் இருக்கிறதோ அந்த நாடு விரைவில் அழிவை சந்திப்பது திண்ணம்...

#விவசாயிகளின்

#கண்ணீர்மழைநீரில்

#கரைகிறது.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/08/25/புதன்கிழமை.

தொலைந்த ஜனநாயகம்

 


#இன்றையதலையங்கம்

#தொலைந்தஜனநாயகம்:-தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தல் நடத்த முடியாமல் தோற்றுவிட்டது என்றால் ஜனநாயகம் அங்கே தோற்றுவிட்டது என்று தானே அர்த்தம்...

தேர்தல் ஆணையம் ஒரு தனி அதிகாரம் படைத்த அமைப்பு என்பதெல்லாம் மக்களையும் மாநில கட்சிகளையும் ஏமாற்றும் வேலையா...

இப்படி வெற்றி பெற்று அரசாள வேண்டும் என்று நினைப்பதெல்லாம் எவ்வளவு அருவருக்கத்தக்க விஷயம் என்று ஒரு தலைவருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ அல்லது இப்படி யாரின் அதிகாரத்திற்கோ அல்லது பணத்திற்கோ விலை போகிறோம் என்று குற்ற உணர்ச்சி இல்லாமல் நடக்கும் தேர்தல் ஆணையத்திற்கோ இல்லை என்றால் நாம் எப்படிப்பட்ட ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று இங்கே ஒவ்வொரு குடிமகனுக்கும் கேள்வி எழுகிறது அல்லவா...

ஓட்டு போட்ட ஒவ்வொரு வாக்காளரும் இங்கே கூனி குறுகி போய் அவமானமாக நினைக்கிறோம் இங்கே நடந்த தேர்தல் ஆணையத்தின் அருவருக்கத்தக்க செயல்பாடுகளை நினைத்து... ஆனால் அவமானமாக நினைக்க வேண்டியவர்கள் ஆழ்ந்த மௌனம் கொண்டு இருப்பது ஏன் என்று இங்கே வாக்காளர்களாகிய நாங்கள் கேள்வி கேட்கிறோம்... நீங்கள் ராகுல் காந்திக்கு பதில் சொல்வதாக நினைக்க வேண்டாம்... ஜனநாயக திருவிழாவில் தொலைந்து போன ஜனநாயகத்தை தேடி அலைந்துக் கொண்டு பித்து நிலையில் இருக்கும் வாக்காளர்களாகிய எங்களுக்கு தங்களது மேலான மௌனத்தை கலைத்து குற்றத்தை ஒப்புக் கொண்டு எங்களிடம் தொலைந்த ஜனநாயகத்தை திருப்பி கொடுத்து விட்டு நடையை கட்டுங்கள் என்று இங்கே கோரிக்கை வைக்கிறோம்...இதை செய்வீர்கள் என்று நம்புகிறோம்... 

இப்படிக்கு எதையும் கண்மூடித்தனமாக நம்பி நம்பி ஏமாறும் இந்திய #ஜனநாயகமக்கள்...

#இன்றையதலையங்கம்.

இளையவேணிகிருஷ்ணா.

நாள்:12/08/25/செவ்வாய்க்கிழமை.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

அந்த மலையோர சாரலில்...


அந்த மலையோர சாரலில் 

நாம் கணக்கற்ற கணங்கள் 

பேசி திரிந்த காலம் 

கடந்து சென்று இன்றோடு 

பல வருடங்கள் ஆகிறது...

இதோ அதே இடத்தில் தற்போது 

நான் மட்டும் நாம் சந்தித்த இடத்தில் 

நிற்கிறேன்...

அங்கே இன்னும் உன் நினைவுகளை 

சுமந்து 

அன்று செடியாக இருந்தது 

தற்போது மரமாக நிற்கிறது 

அந்த செடியை வருடிக் கொண்டே 

நீ பேசிய பொழுதுகளை அன்று 

செடியாக இருந்த மரம்

இன்னும் மறக்கவில்லை...

என்னை போல அதுவும் 

உன்னை மறக்காமல் என்னிடம் 

கேட்கிறது...

நீ எங்கே என்னை விட்டு சென்றாய் 

என்று எனக்கே தெரியாமல் 

இருக்கும் போது 

அந்த மரத்திற்கு என்ன பதில் 

சொல்வேன்...

அந்த கேள்வியை எதிர் கொண்டு 

திணறிய போது 

என் நிலைமையை புரிந்து 

தன் மெல்லிய காற்றால் எனக்கு 

ஆறுதல் தந்ததில் 

நான் உணர்ந்துக் கொண்டேன் 

இந்த உலகில் இன்னும் 

ஜீவனோட்டம் உள்ள 

உயிர்களோடு தான் 

நான் பயணித்து கொண்டு 

இருக்கிறேன் என்று 

சற்றே ஆறுதல் அடைந்து 

அந்த மரத்திற்கு விடை பெறும் முன் 

ஒரு முத்தமிட்டு கண்ணீரோடு 

பயணிக்கிறேன்...

மீண்டும் அங்கே நிச்சயமாக 

வருவேன்...

உன் நினைவுகளை 

ஸ்பரிசிக்க அல்ல 

அந்த உயிரோட்டம் உள்ள ஜீவனை 

ஸ்பரிசம் செய்வதற்காக...

#இளையவேணிகிருஷ்ணா

நாள் 06/08/25/புதன்கிழமை.

காடு ஒரு உயிர்; ஒரு உடல்...

 வணக்கம் அன்பு நேயர்களே 🙏.


இன்றைய பதிவில் காடு பற்றிய விழிப்புணர்வு பதிவு வாசித்து இருக்கிறேன்... உபயம் Aro selva ride  அவர்களுக்கு நன்றி 🙏.

இன்றைய மிகவும் அவசியமான விசயம் காடுகள் பற்றிய விழிப்புணர்வு... இதை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் 🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்கலாம் நேயர்களே 🎉 🙏 🎻.

கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி நேயர்களே 🎉 🙏 🎻.

https://youtu.be/BqnOcCvg738?si=wpPeKAWA32mNSl1m

நான் அவன் இல்லை..


ஒரு முழுமையான வெள்ளை 

காகித தாளில் 

எழுத்துக்களால் அலங்கரித்து 

கொண்டு இருக்கிறேன் 

முடிவில்லாமல் 

என்னை பற்றி ...

மை தீர்ந்த பின்பும் நிரப்பி நிரப்பி 

நடுநிசி வரை 

எழுதி தீர்த்து நிதானமாக 

வாசிக்கிறேன்...

அத்தனை வார்த்தைகளிலும் 

என் வாசம் சிறிதும் இல்லை...

நான் வர்ணித்த வார்த்தைகளின் 

வழியே 

என்னை தேடினேன்...

அதுவோ நான் அவன் இல்லை என்று 

துரித கதியில் சொல்லி விட்டு பறந்து 

சென்று அங்கே 

சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் 

நதியில் 

விழுந்ததில் நான் கணக்கற்ற 

வர்ணனையால் அமிழ்ந்த 

அந்த காகிதம் நனைந்து 

மிதந்து சென்றதை அமைதியாக 

வேடிக்கை பார்த்தேன்...

எந்த சலனமும் இல்லாமல் 

பயணிக்கும் அந்த காகிதத்தில் 

தற்போது மை கலைந்து 

அலங்கோலமாக இருந்தும் 

நிச்சலனமாக ஆழ்ந்த அமைதியோடு 

அந்த நதியில் 

பயணிக்கிறது...

ஆம் நான் அவன் இல்லை தான் 

போலும்...

நான் அவனாக இருந்திருந்தால் 

இப்படி பேரமைதயோடு

பயணிக்காமல் பெரும் சத்தத்துடன் 

கரையேற துடித்திருப்பேன் 

அல்லவா...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/08/25/செவ்வாய் கிழமை.


திங்கள், 4 ஆகஸ்ட், 2025

நான் ஒரு நாடோடி...

 

நான் ஒரு நாடோடி!

இன்று இங்கே

நாளை எங்கே என்று

என்னால் அறுதியிட்டு

சொல்ல முடியாது!

நீயோ ஆதவனே

எப்போதும் ஒரே திசையில்

எழுந்து மறைந்து

என்ன பிழைப்பு என்று

நீ நினைத்தாலும்

உன்னை 

உனது தர்மம் அவ்வளவு

எளிதாக விடப்போவது இல்லை!

நானோ உனது வெளிச்சத்தில்

எப்போதும் எங்கும் இருப்பேன்!

இதோ இந்த திசையில் தான்

நான் பயணிக்க வேண்டும்

என்று எவரும் 

எனக்கு கட்டளை இடமுடியாது!

என்னை அவ்வளவு எளிதாக

கடந்து செல்பவர்கள்

உன்னை விடாமல்

விமர்சனம் செய்கிறார்கள்

என்ன கொடுமை?

தர்மத்தை கேள்வி கேட்க

இங்கே ஆயிரம் பேர்

அதர்மத்தை அப்படியே

கடந்து செல்ல

இங்கே லட்சம் பேர்!

இதுதான் கலிபுருஷனின் 

நியதி!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/08/25/திங்கட்கிழமை.



ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

அந்த அதீத பார்வையின் தீட்சண்யம்...


உன் உஷ்ண விழி பார்வையில் 

அங்கே தமது பார்வையை 

பறி கொடுத்து விட்டு 

உன் மீது கொண்ட பெரும் காதலை 

உணர்த்த வந்தவர்கள் 

தாங்க இயலாமல் 

ஒரு பித்து நிலையில் 

அலைந்து திரிபவர்கள் 

ஏராளம் ஏராளம்...

அதை உணர்ந்து சற்றே 

நான் திகைத்து நிற்கிறேன்...

அந்த சமயத்தில் 

நீ யதேச்சையாக 

என்னை பார்த்து புன்னகை 

பூத்து போகிறாய்...

நான் அந்த பார்வையின் 

குளுமையின் தீட்சண்யத்தை 

தாங்க முடியாமல் 

வேறு பக்கம் 

திரும்பிக் கொண்டேன்...

இந்த பார்வை தான் அத்தனை 

மனிதர்களின் விழிகளின் 

ஒளியை பறித்துக் கொண்டதா என்று 

நம்ப முடியாமல் 

தவித்து நிற்கும் போது 

மீண்டும் நீ அங்கிருந்து 

போய் விட்டாயா என்று சற்றே 

திரும்பி பார்க்கிறேன்...

நீயோ அந்த புன்னகை 

பூத்த பார்வையை இன்னும் 

என் மீது பதித்து அப்படியே 

நிற்கிறாய்...

நீ அப்படி பார்க்காதே...

அந்த பார்வையின் குளுமையை 

தாங்க இயலாமல் என் பார்வை 

பறி போய் விட போகிறது...

இங்கே அதீதமாக நம் மீது 

செலுத்தப்படும் எதுவும் 

நஞ்சாகவே முடிந்து விடும் என்று உனக்கு எவரும் 

புரிய வைக்கவில்லை போலும்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:04/08/25/

திங்கட்கிழமை.



சிறுகதை உலகம்//#வளர்கவிகதைகள்

 


நேயர்களே வணக்கம் 🙏 

தற்போது எழுத்தாளர் வளர்கவி கோவை அவர்களின் அற்புதமான நெகிழ்வான கதையை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉 🙏 🎻.

மனிதாபிமானம் மிருகங்களுக்குள் தஞ்சம் புகுந்து விட்டதோ... நெகிழ்வான இந்த கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏🎉🎻.

https://youtu.be/R60HeR6bzgQ?si=XW3giIMCZN5hwmd6

#சிறுகதைஉலகம்//#வளர்கவி கதைகள்

 


வணக்கம் நேயர்களே 🎻🙏🤝.

இன்று சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் வளர்கவி கோவை அவர்களின் அற்புதமான கதையை வாசித்து இருக்கிறேன்.. கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🎉 🙏 🎻.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு மகிழலாம் 🎻❤️✨💫

https://youtu.be/_BCUBunm9sA?si=aDDKuB2_ptG9gw7l

சனி, 2 ஆகஸ்ட், 2025

உன் மீதான காதலில்...


உன் மீதான காதலில்

அமிழ்தம் நிரம்பிய பாத்திரம் போல 

குளிர்ந்த மனது 

இன்றோ ஒரு சிறு ஊடலில் 

எரிமலை வெடித்து 

சிதறியதை போல 

எரிந்து சாம்பலாகி காற்றில் 

பறக்கிறது...

அந்த சாம்பலின் நம் காதலின் 

கருகலின் வாசத்திலேனும் 

நீ உன் ஊடலை மறந்து 

என்னை அணைத்துக் கொள்ள 

ஓடோடி வந்து விடமாட்டாயா என்று 

ஏங்கி தவிக்கும் மனதை 

தேற்றவேனும் வருவாயோ 

இல்லை மீண்டும் 

மனதை எரிய வைத்து சாம்பலை 

காற்றில் கலக்க விடுவாயோ 

சொல்லி விடு 

என் பெரும் காதலே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/08/25/ஞாயிற்றுக்கிழமை

நானும் அந்த குருவியும் சிருஷ்டியும்...


நான் எனக்குள் சிருஷ்டித்து 

வாழும் உலகத்தின் கண்ணாடியால் 

அலங்கரிக்கப்பட்ட 

சன்னலை அங்கே பறந்து வந்த 

குருவி ஒன்று 

இலேசாக தட்டுகிறது...

நானும் நீ சிருஷ்டித்த உலகத்தில் 

வசிக்கட்டுமா என்று...

ஏன் இந்த கேள்வி சற்றே சத்தம் 

இல்லாமல் நீ உள்ளே வா 

அதோ அங்கே உன் வாழ்நாளை 

களவாட வேகமாக ஒரு மனிதன் 

உன்னை நோக்கி வருவதற்குள் 

நீ என் உலகத்தில் இயைந்து விடு 

இல்லை என்றால் அவன் சிருஷ்டித்து 

அலங்கரித்த வயிறெனும் 

நரகத்தில் உன்னை தள்ளி 

மாபெரும் வீரனாக கதை பேசி 

இன்றைய அந்த அற்புதமான 

மாலைப் பொழுதை காயப்படுத்தி 

கடும் சிரிப்பை பரப்பி இரவின் 

அமைதியை கெடுக்கும் ராட்சசன் 

ஆகி கடும் தாண்டவம் ஆடுவான் 

என்றேன்...

ம்ம் சற்றே நீ பேச்சை குறைத்து 

உன் சன்னலை விரைவாக திற 

என்றது ...

என் சிருஷ்யில் 

அடைக்கலம் கேட்டு வந்த 

அந்த குருவி...

நானும் அதன் பேச்சை ஆமோதித்து 

சற்று வேகமாக சன்னலை திறந்து

என் அந்த அதிஅற்புதமான 

சிருஷ்டியில் அதை 

ஒரு ஓவியமாக பாவித்து 

அதை உள்ளே அனுமதித்தேன்...

இங்கே நானும் அதுவும் 

புதிய அனுபவத்தை அணு அணுவாக 

ரசித்துக் கொண்டே இருக்கும் போது 

அந்த மனிதன் அந்த குருவியின் 

பறந்து வந்த அடையாளத்தை 

தொடர்ந்து வந்து பாதியில் 

மறைந்த இடத்தில் நிற்கிறான்...

எங்கே சென்று இருக்கும் 

அதற்குள் என்று...

திகைத்து நிற்கும் போது 

நாங்கள் இருவரும் பல கதைகளை 

பேசி கள்ளம் கபடமற்ற சிரிப்பில் 

அந்த சிருஷ்டியை 

மகிழ்வித்து கொண்டு 

இருப்பதை இங்கே 

எங்களை தவிர அந்த மனிதன் அறிய 

நியாயம் இல்லை தானே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 02/08/25/சனிக்கிழமை.


 






அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...