ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 23 ஏப்ரல், 2022

போதை என்பது..

 அங்கே 

வாழ்வெனும் மதுவை கணக்கற்ற நிலையில் 

பருகி போதை ஏறாமல்

தவிக்கிறான் ஒருவன்...

இங்கே 

இறப்பெனும் 

ஒரு துளி அமிர்தத்தை 

பருகி...

போதையேறி ஆனந்த தாண்டவம் புரிகிறான்...

இன்னொருவன்...

இங்கே இதெப்படி சாத்தியம்

என்று கேள்வி கேட்டு

சலசலப்புடன் நகரும்

மக்களுக்கு தெரியாது

போதை என்பது

விகாரமற்ற மனதின்

வெளிப்பாடு என்பது...

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...