ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 23 ஏப்ரல், 2022

வேண்டும் வேண்டும்

 எந்தவித போதையும்

இல்லாத

ஓர் போதை இங்கே

எனக்கு வேண்டும்..

அத்தனை வஸ்துவின்

போதையையும்

ஒரு விசயம் தர வேண்டும்

அதுவும் போதையை

கடந்த போதையாக

என்னுள் இறங்க வேண்டும்..

எந்தவித மயக்கத்திலும்

திளைத்து விடாத 

போதையாக வேண்டும்..

அந்த போதை வசப்பட

நான் என்ன செய்ய வேண்டும்

இப்படி வேண்டும் வேண்டும்

ஆயிரம் ஆயிரம் வேண்டும்

வேண்டாத விசயம்

இங்கே சாத்தியமில்லை

என்று தெரிந்தபின்னும்

வேண்டும் வேண்டும் என்று

ஆர்ப்பரிக்கும் மனதை

கொஞ்சம் கட்டிப் போட

வித்தை ஒன்று வேண்டும்..

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...