பக்கங்கள்

புதன், 31 ஜூலை, 2024

வயநாட்டில் இயற்கையின் எச்சம்...




இயற்கை அன்னையின் 
பயங்கர கோபத்தில் 
சிதைந்த வீட்டில் 
சிதையாத எச்சமாக 
ஒரு அன்பான குடும்பம் 
புகைப்பட வடிவில் 
அதே பூமியில் 
பெரும் ஏக்கத்தோடு 
தஞ்சம் அடைகிறது ...
அந்த பூமி மௌனமான 
கண்ணீரோடு 
தாய்மை குணம் மாறாமல் 
அணைத்துக் கொண்டு 
குலுங்கி குலுங்கி அழுவதை 
இங்கே யார் அறியக் கூடும்?

#வயநாடு

#இயற்கையின்கோபம்.

#இளையவேணிகிருஷ்ணா.

31/07/24/புதன் கிழமை.

ஞாயிறு, 28 ஜூலை, 2024

அந்த வஞ்சிக்கப்படாத இரவொன்றில்...


அந்த வஞ்சிக்கப்படாத 

இரவொன்றில் 

சற்றே அந்த பாறையில் 

இளைப்பாறுகிறேன் 

எனக்கு பிடித்த 

அந்த தேநீர் கோப்பையோடு 

அங்கே சுற்றி திரிந்த மானொன்று என் அருகில் வந்து ஒரு தீர்க்கமான பேரன்போடு நின்றது...

என் தேநீர் கோப்பையை பயத்தோடே முகர்ந்து பார்த்து விட்டு என்னை மிரட்சியோடே பார்த்தது...

நான் அதை தடவி கொடுத்து 

அந்த தேநீரை சுவைக்க கொடுத்தேன்...

அந்த சுவை அதற்கு பிடித்து விட்டதோ தெரியவில்லை 

என்னை ஒரு திருப்தியாக 

பார்த்தது...

நானும் அதை பார்த்து புன்னகைத்தேன்...

பிறகு என்ன நினைத்ததோ 

என் அருகில் அமர்ந்து கொண்டது...

நான் அதை கொஞ்சம் வருடி விட்டு அந்த வனத்தின் அழகை இருளில் ரசிக்கிறேன் ...

நானும் அந்த மானும் மௌனத்தில் ஒரு ஆழ்ந்த உரையாடலை நிகழ்த்தி விட்டு விடை பெற எத்தனிக்கும் போது 

அந்த இரவு ஒரு செருமலோடு எச்சரித்தது 

நீங்கள் பேசிய ரகசியம் நானும் அறிவேன் என்று..

நான் அதனால் என்ன என்று அதற்கு ஒரு புன்னகையை உணர்த்தி விட்டு அந்த மானை மீண்டும் ஒரு பாசத்தோடு வருடி விட்டு 

விடை பெறும் போது 

அந்த மான் மீண்டும் எப்போது இந்த வனத்திற்கு என்று மௌனமாக கேட்டது...

ஓ அதுவா மீண்டும் இது போல வஞ்சிக்கப்படாத இரவொன்று அமையும் போது என்றேன்...

அது அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் அமைந்து விடும் எனக்காக இந்த வனத்திற்காக என்றது 

மௌனமொழியில்...

இதை எல்லாம் சாட்சியாக கவனித்து வந்த 

அந்த வனம் கொஞ்சம் ஆச்சரியமாக எங்களை பார்த்தது...

#வஞ்சிக்கப்படாத #இரவொன்றில் 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 29/07/24/திங்கட்கிழமை.

நான் வனத்தின் நாயகி...

 


பனி அடர்ந்த அந்த வனத்தில் 

சிறு தீ மூட்டி குளிர்காய்கிறேன்...

அந்த மரங்கள் எனக்காக 

சிறு அசைவில் சில இசையை இசைக்கிறது...

அருகில் ஓடும் சிற்றோடையோ நான் தனிமையை உணராமல் இருக்க என் கால்களை உரசி 

சிறு உரையாடல் நிகழ்த்தி விட்டு பயணிக்கிறது...

நானும் அந்த தீயும் ஏதும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தோம்...

அந்த இரவின் நிசப்தமும் 

இங்கே ஏதோவொரு நிகழ்வில் தம்மை இணைத்துக் கொண்டு எதையோ என்னோடு கொண்டாடி விட துடிக்கிறது...

நான் இங்கே பேசாத மௌனியாக அந்த வனத்தின் பேரழகை ரசித்துக் கொண்டே இருக்கும் போது 

என் காதருகே அந்த தீ 

நீ உன் காதலை என்னோடு கொண்டாடி இந்த இரவை எப்போதும் நினைவு கூறும் இரவாக...

இந்த பிரபஞ்சத்திற்கு

பரிசளித்து செல்வாயா என்று பேச 

ஆரம்பிக்கும் போது 

நான் என் கடந்த கால காதலின் சுவடை கண்ணீருக்கு 

பரிசளித்து விட்டு 

பரிசுத்தமான பேரன்போடு 

அந்த தீயின் கையை பிடித்து 

நடனம் ஆடி என்னுள் கனன்று கொண்டு இருந்த காதலை அந்த தீயின் நாசியோடு..பேரன்போடு... என் சுவாசத்தின் வழியே கலந்து சோர்வாக 

அந்த வனத்தில் வீழும் போது 

மீண்டும் அந்த நதியே ஸ்பரிசித்து என்னை சகஜ நிலைக்கு கொண்டு 

வரும் போது நான் இந்த வனத்தின் நாயகியாக உணர்கிறேன்...

#நானும்வனமும்

#இளையவேணிகிருஷ்ணா.

29/07/24/திங்கட்கிழமை.

சனி, 27 ஜூலை, 2024

அனுதாபம் கொள்பவர்கள்

 


அந்த வெட்டப்பட்ட கிளையின் 

சிறு நுனியில் 

அமர்ந்து வேடிக்கை 

பார்ப்பது எனக்கொன்றும் புதிதல்ல!

அங்கே எனை பார்த்து 

அனுதாபம் கொள்பவர்கள் தான் 

பாவம்...

எனை பார்த்து விட்டு 

அந்த நாளின் அமைதியை 

தொலைத்து விட்டு 

துடிக்கிறார்கள்!

#அனுதாபம் கொள்பவர்கள் 

#இளையவேணிகிருஷ்ணா.

28/07/24/ஞாயிற்றுக்கிழமை.

காலை மணி 9:24.

வியாழன், 25 ஜூலை, 2024

இரவு கவிதை 🍁

 


யாரோ எவ்வளவு பெரிய ஆளாக 

வேண்டும் என்றாலும் 

இருந்து விட்டு போங்கள்... 

அது உங்கள் லௌகீக விஷயம்... 

ஆனால் அந்த லௌகீக எல்லையில் 

என்னை வைத்து பார்க்காதீர்கள்... 

நான் எப்போதும் வேறானாவள்... 

இந்த பிரபஞ்சமே 

எனை படைத்து விட்டு 

கொஞ்சம் மிரண்டு தான் 

கிடக்கிறது... 

அதில் நீங்கள் வெறும் தூசி எனக்கு...

வெற்று ஆராவாரங்களின் 

சத்தத்தில் எல்லாம் 

என் பெரும் ஆகர்ஷண சக்தி 

ஒளி(லி) இழந்து விட 

நான் எப்போதும் 

அனுமதிப்பதில்லை...

#இரவு கவிதை 🍁

திங்கள், 22 ஜூலை, 2024

இரவு கவிதை 🍁


அந்த பட்டமரத்தின் கவலைகளை 

இங்கே யார் அறியக் கூடும் 

கொடிய விஷத்தை கக்கி 

உயிரோட்டம் நிரம்பிய 

இந்த பிரபஞ்சத்தை 

கொஞ்சம் கொஞ்சமாக 

உயிர் இழக்க செய்யும் 

மனிதர்களிடையே

அதை கவனிக்க எவரும் இல்லாமல் 

காற்றில் அசைந்தாடி நடனம் ஆடி 

அந்த முழு நிலவின் ஈர்ப்பை பெற்று விட 

அந்த மரம் போராடுவதை பார்த்து 

நிலவும் இரக்கம் கொண்டு 

தனது கிரணங்களால் பெரும் காதல் கொண்டு 

அணைத்துக் கொள்ளும் போது 

உயிர் பிழைத்து ஆனந்தம் 

கொள்கிறது...

இங்கே உயிரோட்டத்தின் மகத்துவம் 

பெரும் காதலில் உள்ளது என்று 

அந்த மூட மனிதர்கள் 

அறியமாட்டார்கள் என்று 

இந்த பிரபஞ்சம் ரகசியமாக 

பேசிக் கொள்கிறது...

#இரவு கவிதை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 22/07/24/திங்கட்கிழமை.

முன்னிரவு 8:54.

ஞாயிறு, 21 ஜூலை, 2024

இரவு சிந்தனை: மனிதர்கள் பலவிதம்

 


நாம் வாழ்வில் தவிர்க்க வேண்டிய மனிதர்கள் யார் யாரெல்லாம் என்று கீழேயுள்ள காணொளி லிங்கில் தெரிந்துக் கொண்டு எச்சரிக்கையாக இருங்கள் நேயர்களே 🎻✨🎉🥳.

இனி எல்லாம் சுகமே ✨🚴😍.

https://youtu.be/2u8XfdFgFQk?si=Zqgo3CYVvifn0DP9

இரவு சிந்தனை ✨


எதிர் மறை சிந்தனை 

உடையவர்களிடம்

உங்கள் உரையாடலை 

குறைத்துக் கொள்ளுங்கள்...

உண்மையில் அவர்கள் 

உங்களிடம் இருக்கும் 

கொஞ்சம் நஞ்சம் உள்ள 

நேர்மறை எண்ணங்களையும் 

குறைத்து 

உங்களை சோர்வடைய 

செய்து விடுவார்கள்...

இறைவனின் பூரண அனுகிரகம் 

உள்ளவர்கள் எது விசயமாகவும் 

எதற்காக 

பயம் கொள்ள வேண்டும்??

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவு சிந்தனை 🍁.

நாள் 21/07/24.

ஞாயிற்றுக்கிழமை.

வெள்ளி, 19 ஜூலை, 2024

அமைதியும் நானும்...


அமைதிகள் எப்போதும் 

தோற்பதும் இல்லை!

சத்தத்தோடு போராடுவதுமில்லை!

இங்கே ஆயிரம் ஆயிரம் 

சலனங்கள் வரலாம் போகலாம் 

எப்போதும் ஒரு வசீகரத்தோடு 

ராஜ நடை போட்டு 

மனமெனும் வீதியில் உலாவுகிறது அமைதி...

அதை நான் கண்டுக் கொண்டேன் 

அதனோடு மட்டும் பெரும் காதல் செய்து 

உலாவுகிறேன் ஒரு மனதிற்கு பிடித்த 

மெல்லிசையோடு...✨

இளைய வேணி கிருஷ்ணா .

அமைதியும் நானும் 💞

நாள் 20/07/24.

நான் நானாக...


ஆயிரம் நதிகள் என்னை சுற்றி 

சலனமுற்று அதிக சத்தத்துடன் 

ஓடிக் கொண்டே இருந்தாலும் 

எந்த ஆராவாரமும் இல்லாமல் 

ஆழ்ந்த பேரமைதியோடு

சஞ்சலம் இல்லாமல் பயணிக்கும் 

அபூர்வ நதி நான்...

#இளையவேணிகிருஷ்ணா...

#நான் நானாக 🔥.

நாள் 20/07/24.

தப்பித்தல்...🏃


அங்கே வேகமாக ஓடிக் கொண்டே 

இருக்கும் அந்த மனிதருக்கு 

இப்படியாக தத்துவத்தை 

போதிக்கிறேன்..

ஏதோவொன்றிக்காக 

ஓட துவங்குகிறீர்கள்...

அது அந்த ஒன்றை திருப்தி செய்ய 

என்று நினைத்தீர்கள் என்றால் 

நிச்சயமாக அது மாபெரும் பொய் 

என்று உங்களுக்கே தெரியும் ...

பிறகு ஏன் ஓட வேண்டும் என்று 

கேட்டுக் கொண்டே 

ஒரு அனிச்சை செயலாக 

ஓடிக் கொண்டே இருக்கிறீர்கள் 

பாருங்கள் அது தான் 

மாபெரும் மாயா ...

இங்கே ஓடுவது என்பதே மிகவும் 

மோசமான மாயை என்று 

அங்கே அந்த மனிதருக்கு 

சொல்லிக் கொண்டே 

இருக்கும் போதே 

அவர் அதைப் பற்றி சிந்திக்க 

துவங்கும் போது 

வேகமாக அவரை தரதரவென 

இழுத்துச் சென்றார் 

 ஓடுவதில் அதி தீவிர 

எண்ணம் கொண்ட 

இன்னொரு மாய மனிதர் ...

அதை பார்த்து நான் ஒன்றும் 

அதிர்ச்சி அடையவில்லை ...

மாறாக நிம்மதி பெருமூச்சு விட்டேன்...

ஏனெனில் அந்த மாய மனிதர் 

எனை இழுத்துக் கொண்டு 

ஓடவில்லையே என்று...

இங்கே ஒன்றில் இருந்து 

தப்பிப்பது என்பதே 

தெருவில் கூவி கூவி 

ஏதோவொன்றை 

விற்றுக் கொண்டு இருக்கும் 

மனிதர்களை லாவகமாக விலக்கி 

நடப்பதை போன்றது தானே என்று 

என்னை நானே தேறுதல் 

செய்துக் கொண்டு நடக்கும் போது 

அங்கே எங்கிருந்தோ வந்து

என் முகத்தில் அறைந்து மெதுவாக 

இழுத்து செல்லும் தென்றலின் 

பேரன்பை மட்டும் விலக்க 

மனமில்லாமல் அதனோடு நான் 

மெல்லிய புன்முறுவலோடு 

ஓடுகிறேன்....

#இளையவேணிகிருஷ்ணா.

#தப்பித்தல்.

நாள் 20/07/24.

சனிக்கிழமை.



சலனமற்று திரும்பி பார்ப்பேன்...🤷


இங்கே என்றேனும் ஒரு நாள் 

என் ராஜ்யம் வீழ்ந்து விடக் கூடும்..

சலனமற்ற பார்வையால் 

நான் அதை கடந்து 

சென்றுக் கொண்டே இருப்பேன்..

இங்கே உன் ராஜ்ஜியம் தானே 

வீழ்ந்து கிடக்கிறது 

நீ ஏன் இப்படி சலனமற்று 

கடந்து செல்கிறாய் என்று 

அங்கே எவரேனும் 

கூக்குரல் இட்டு கேட்கவும் கூடும் 

அப்போதும் 

நான் சலனமற்று திரும்பி 

பார்ப்பேன் ...

வீழ்ந்தது நானல்லவே என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

20/07/24.

சனிக்கிழமை.

காலை சிந்தனை: இறைவனின் பூரண அனுகிரகம் 🔥


அஞ்ஞானத்தால் சூழ்ந்திருக்கும் 

மனிதர்கள் எதைஎதையோ

பொருள் இல்லாமல் 

பேசிக் கொண்டே தான் 

இருப்பார்கள்...

அவர்களின் பொருளற்ற பேச்சுக்கு 

மதிப்பளிக்காதீர்கள்...

உங்களோடு பேசாமல் 

மௌனமாக இருந்தாலும் 

அந்த இறைவன் தான் 

உங்கள் மீது பேரன்பு கொண்டு 

உங்கள் நேர்மையான 

காரியம் அனைத்திற்கும் 

துணையாக இருந்து 

பெரும் மகிழ்வு அடைவார் என்பதை 

என்றும் மறவாதீர்கள்!💫

#இளையவேணிகிருஷ்ணா.

காலை சிந்தனை 🍁.

20/07/24.

சனிக்கிழமை.

காலை சிந்தனை 🍁


சிப்பாய்களின் பாதுகாப்பு 

என்றேனும் உடைந்து 

நொறுங்கி விடக் கூடும்...

நீங்கள் உங்கள் 

தைரியத்தை மட்டும் 

பேரன்பு கொண்டு 

நேசித்துக் கொண்டே வாருங்கள்...

நிச்சயமாக அது தான் இறைவன் 

உங்களுக்கு கொடுத்த கவசம்...

எப்போதும் உங்களை இரவும் பகலும் 

கண் துஞ்சாமல் பாதுகாத்து நிற்கும்!

#இளையவேணிகிருஷ்ணா.

#காலை சிந்தனை 🍁.

20/07/24.

புதன், 17 ஜூலை, 2024

கடந்து வந்த பாதை...

 


கடந்து சென்ற பாதையை பற்றி 

சிறிதும் நினைவில் இல்லை..

நினைவிருத்த தேவையுமில்லை!

எதிரே இருக்கும் 

பாதையின் நீட்சியின் 

சூட்சமங்கள் புரியவில்லை..

புரிந்துக் கொள்ள அவசியமும் 

எனக்கு இல்லை...

இந்த இரண்டிற்கும் இடையே 

என் கால்கள் முத்தமிடும் 

இதோ இப்போதைய சாலை

எனை நகர்த்தி செல்கிறது...

அங்கே சாலையின் முடிவில் 

காலம் ஒரு சிறு குழந்தையின் 

வடிவில் எனை அணைத்து 

தோளில் சாய்த்து ஒரு சூட்சம 

உறக்கத்திற்கு 

அழைத்துச் செல்லும் நாளில் 

நான் சுகமாக உணரும் தருணத்தில் 

நான் நடந்து வந்த 

பாதையின் கதையை 

அங்கே யாரோ யாரோடோ 

விவாதிக்கும் போது மட்டும் 

நான் சுமையாகி கணக்கிறேன் 

அந்த காலத்தின் கைகளில்....

#இரவு கவிதை 🍁 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:17/07/24/புதன் கிழமை.

முன்னிரவு பொழுது 10:48.

அந்த தொலைதூர நிழவொன்றில்🍁


அந்த தொலைதூர இரவின் 

நிழலொன்றில் 

நான் தகிக்கும் வெப்பத்தை 

உணர்கிறேன்...

எனக்கு அது சலிப்பை தருவதில்லை 

அது வழக்கமான ஒன்று தான் 

என்று சகஜமாக நடக்கிறேன்...

என் நிலைமையை பொறுக்க முடியாத 

காற்று ஒன்று எனை தீண்டி 

தகிக்கும் வெப்பத்தை 

என் மேனியில் இருந்து 

உதிர்க்க பார்த்து தோற்று போவதை 

பார்த்து நான் கண்ணீர் வடிக்கிறேன்...

அது என் மீது கொண்ட 

பேரன்பின் கரைதலை பார்த்து...

இங்கே இயல்பை மறந்து 

ஆயிரம் ஆயிரம் விசயங்களை 

கடந்த போதும் 

நான் சிறிதும் சலனப்படுவதில்லை ...

அது தான் உயிர் துணையின் 

நிரந்தர நீட்சி..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:17/07/24/புதன் கிழமை.

முன்னிரவு 9:46.

வெள்ளி, 12 ஜூலை, 2024

வானொலி: இசையோடு ஒரு பயணம் 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று இரவு இந்திய நேரம் #ஒன்பது மணிக்கு இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி #லசபா அவர்களின் கவிதைகளோடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻.

இது படைப்பாளிகளின் படைப்புகளை சிறப்பிக்கும் நிகழ்ச்சி 🙏🎻✨.

இந்த நிகழ்ச்சி கீழேயுள்ள வானொலி லிங்கில் கேட்டு மகிழலாம் 🙏🎻✨.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 11 ஜூலை, 2024

கிருஷ்ணா இணையதள வானொலி: இசையோடு ஒரு பயணம் 🎻


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான மாலை வணக்கம் 🙏.

இன்று இரவு #இந்திய நேரம் #ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி ஒலிபரப்பு சேவையில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி #லசபா அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் 🎻🙏✨.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவையில் இணைத்துக் கொள்ளுங்கள் நேயர்களே 🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 10 ஜூலை, 2024

கிருஷ்ணா இணையதள வானொலி: இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி #லசபா அவர்களின் கவிதைகளோடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻.

இது படைப்பாளிகளின் படைப்புகளை சிறப்பிக்கும் நிகழ்ச்சி 🙏🎻✨.

இந்த நிகழ்ச்சி கீழேயுள்ள வானொலி லிங்கில் கேட்டு மகிழலாம் 🙏🎻✨.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 9 ஜூலை, 2024

இரவு கவிதை: அந்த புகைப்படத்தின் நினைவலைகள்...


அந்த புகைப்பட கருவியின் 

உள்ளே உள்ள முகங்கள் 

ஆயிரம் ஆயிரம் கதைகளை 

சொல்லி நினைவலைகளை 

ஒரு இசையை போல மீட்ட மீட்ட 

அதனோடு தொடர்புடையவர் 

கண்களில் இருந்து வழியும் 

கண்ணீரோடு பேச்சற்ற மௌனியாக 

அங்கே அமர்ந்து 

அந்த புகைப்படத்தை 

பார்க்க முடியாமல் கண்ணீர் 

திரையிட்டு மறைக்க 

பார்த்துக் கொண்டு இருக்கும் ...

அந்த மனிதர் தான் 

அந்த புகைப்பட கலைஞருக்கு 

பெரும் விருதாக கைகளில் 

கனத்து நிற்கிறது...

#இரவுகவிதை.

#புகைப்படம்சொல்லும்கதை.

நாள் 09/07/24/செவ்வாய் கிழமை.

முன்னிரவு பொழுது 10:48.

#இளையவேணிகிருஷ்ணா.

தினம் ஒரு சிந்தனை ✨

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏.

நல்ல சிந்தனைகள் தான் நம்மை நமது வாழ்வை தெளிந்த நீரோடை போல நெறிப்படுத்துகிறது..அந்த வகையில் தினம் ஒரு சிந்தனை கேட்டு மகிழ கீழேயுள்ள யூடியூப் லிங்கில் இணைந்துக் கொள்ளுங்கள் நேயர்களே 🙏🎻✨🎉.

https://youtu.be/m8K1nZVrWrk?si=x_EX0C56xZL4y3wV

வானொலி: இசையோடு ஒரு பயணம் 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎻✨.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி ஒலிபரப்பு சேவையில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி #லசபாஅவர்களின் அருமையான கவிதை தொகுப்புகளோடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் 🎻.

இது ஒரு படைப்பாளிகளை ஊக்குவிக்கும் அற்புதமான கலைப் பயணம் நேயர்களே 🙏🎻.

தங்களது மேலான பங்களிப்பு தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் வெற்றி ✨🎉🦋.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவையை கேட்டு ரசிக்கலாம் நேயர்களே 🎻🙏🎻🍁✨.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 8 ஜூலை, 2024

இரவு கவிதை 🍁


தொலைந்து போன கனவுகளின் 

சாயலின் நிழலொன்று

என்னை விடாமல் துரத்தி வருகிறது 

பாவம் அது என்னை துரத்தி வந்து 

மூச்சிரைக்க என் பெயரை சொல்லி 

உறுதிப்படுத்திக் கொண்டு 

கை அசைவில் கொஞ்சம் தண்ணீர் கேட்டு 

நிற்க நான் அதை கொடுக்க இயலாத 

கையறு நிலையில் என் உயிர் 

என் உடலில் இருந்து வெளியேற 

துடிப்பதை பார்த்து அந்த நிழல் 

என்னை தாங்கி பிடித்து என் கரங்களில் 

உயிர் துறக்கும் பெரும்தன்மையை 

இங்கே யார் அறியக் கூடும்?

#இரவு கவிதை 🍁 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/07/24/திங்கட்கிழமை.

முன்னிரவு பொழுது 10:30.

கிருஷ்ணா இணையதள வானொலி: இசையோடு ஒரு பயணம் 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி ஒலிபரப்பு சேவையில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் 🎻.

இதில் படைப்பாளி #லசபா கவிதை தொகுப்புகள் மற்றும் இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் 🎻🍁🦋🎉.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவையை கேட்டு மகிழுங்கள் 🙏.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 4 ஜூலை, 2024

இன்றைய தலையங்கம்:தர்ம சிந்தனை இல்லாத ஜனநாயக தலைவர்கள்

 


இன்றைய தலையங்கம்:- பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் படுதோல்வி அடைய உள்ளது... தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற உள்ளது... அங்கே அரசியல் மாற்றம் நிகழ இருந்தாலும் அங்கேயும் பெரிதாக மக்கள் நலன் சார்ந்து யோசிக்கும் அரசியல் கட்சிகள் இல்லை என்றே தோன்றுகிறது... உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனித்தால் தெரியும் பெரும்பாலான நாட்டு தலைவர்கள் அனைவரும் தனது அதிகாரத்தை உலக அளவில் நிறுத்தி புகழோடு வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு செயல்படுகிறார்கள் என்பது புரியும்... மற்ற படி அங்கே வாழும் ஓட்டு போட்ட ரோட்டோர பிரஜைகள் ரோட்டோரமாகவே தான் இனியும் வாழ்வார்கள்... பிச்சை எடுப்பவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டு தான் இருக்க போகிறார்கள்... இது பொதுவான விதி... அதுவும் பிரிட்டிஷ் என்றாலே அகங்காரமும் அவர்கள் கல் நெஞ்சமும் தான் நம் மனதில் நிழலாடும்...ராணிகளின் தேசமாக இருந்தாலும் ராஜாங்கம் என்பதோ அடிமை சாசனத்தின் வெப்பத்தை தான் மக்கள் வாழ்வில் உமிழ போகிறார்கள்... என்ன ஒரு மாற்றத்திற்காக அதிகாரம் மக்கள் மூளையை சலவை செய்து கை மாற்றப்படுகிறது அவ்வளவே...ரிஷி சுனக் நினைத்து இருந்தால் அங்கே வாழும் சாதாரண பிரஜைகளுக்கு எதுவேனும் செய்து இருந்து இருக்கலாம்.. மாமனார் பணக்காரர் இவர் உலகத்திலேயே மிக பெரிய பணக்காரர்... ஆனால் என்ன பிரயோஜனம்... இங்கே ஜனநாயக மன்னர்கள் ஒரு தர்ம சிந்தனை இல்லாத முட்டாள்கள் என்றால் ஓட்டு போடும் மக்கள் எல்லோரும் எதையும் கூர்ந்து யோசிக்க கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும் அதிமுட்டாள்கள் தான்...எதுவோ இந்த பிரபஞ்சம் இங்கே நடக்கும் எந்த விசயத்திலும் தலை இடாமல் தனது கடமைகளை மௌனமாக ஆற்றி விட்டு அது பாட்டுக்கு போகிறது பாருங்கள் அது போல நாமும் ஒரு பாதையில் ஜனநாயக நாட்டில் அரசாட்சி செய்யும் அதி புத்திசாலிகளின் சூட்சம வலையில் சிக்கி சின்னா பின்னம் ஆகாமல் இருந்தால் சரி தான்...🏃🚣.

#இன்றையதலையங்கம்.

#ஜனநாயகமுட்டாள்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁 வெறுமையை தாங்கிய பொழுதொன்றில்

 


வெறுமையை தாங்கிய 

பொழுதொன்றில் 

வண்ண கனவுகளை அசைப்போட்டு 

முடிப்பதற்குள் வெறுமையை 

கொஞ்சம் தூர வைத்து 

மெல்ல உறங்கி விடுவதில் 

முனைப்பு காட்டி கொஞ்சம் 

எனக்கான விடுதலையை போராடி 

பெற்று தந்து விடுகிறது 

இமைகளும் இந்த கருமை தாங்கிய 

அமாவாசை இரவும்...

#இரவு கவிதை 🍁 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:04/07/24/வியாழக்கிழமை.

முன்னிரவு பொழுது 9:45.

செவ்வாய், 2 ஜூலை, 2024

சமுத்திரத்தில் எனது பயணம் 🚣

 


சமுத்திரத்தில் செய்யும் பயணத்தில் ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள்!ஆயிரம் ஆயிரம் ஆச்சரியங்கள் ! ஒரு பயணத்தின் ஆனந்தம் அந்த பயணம் முடிவுறும் தருணத்தின் எல்லை நமக்கு தெரியாமல் இருப்பது.அந்த வகையில் சமுத்திர பயணம் நம்மை உற்சாகப்படுத்தும்... என்றேனும் ஒரு நாள் சமுத்திர பயணத்தில் பயணிக்கும் போது என் வாழ்வின் சுமைகளை அந்த சமுத்திரத்தில் தூக்கி எறிந்து விட்டு மிகவும் இலகுவான சிறகோடு அந்த சிறகையும் விரிக்காமல் ஆழ்ந்த அமைதியோடு அந்த சமுத்திரத்தின் பேரழகை கண்களால் பருகி ரசித்துக் கொண்டே செல்ல வேண்டும் நெடுந்தூரம்... தூரம் முடிவற்ற தூரமாக அது இருக்க வேண்டும்.. பகல் இரவு வந்து வந்து போக வேண்டும்.. மழையும் குளிரும் வெயிலும் என் மீது படர வேண்டும்.. எத்தனையோ பௌர்ணமிகள் அந்த பயணத்தில் வந்து சென்றாலும் இதோ இப்போது என்னோடு காதலோடு பயணிக்கும் இந்த பௌர்ணமி நிலவோடு ஒரு காதலை நிகழ்த்தி விடிகின்ற பொழுதில் கரை ஏறி விட வேண்டும்.. அப்போது எனக்கும் அந்த பௌர்ணமிக்குமான அந்த காதலின் தனித்துவத்தை இந்த பிரபஞ்சம் யுகம் யுகமாக பேசி தீர்க்க வேண்டும் ...

#நானும்சமுத்திரமும்

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 1 ஜூலை, 2024

காலை கவிதை 🍁


காலத்தின் நேசத்தில் 

கரைந்து விடுவதில் 

எப்போதும் தயாராக இருங்கள்!

ஒரு கோப்பை தேநீரோடு 

காலம் உங்கள் நேசத்தில் 

கரைய எவ்வளவு நேரம் தான் 

உங்களுக்காக காத்திருப்பது???.

#காலைகவிதை🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/07/24/செவ்வாய் கிழமை.

#இளங்காலைப்பொழுது.