பக்கங்கள்

வியாழன், 4 ஜூலை, 2024

இன்றைய தலையங்கம்:தர்ம சிந்தனை இல்லாத ஜனநாயக தலைவர்கள்

 


இன்றைய தலையங்கம்:- பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் படுதோல்வி அடைய உள்ளது... தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற உள்ளது... அங்கே அரசியல் மாற்றம் நிகழ இருந்தாலும் அங்கேயும் பெரிதாக மக்கள் நலன் சார்ந்து யோசிக்கும் அரசியல் கட்சிகள் இல்லை என்றே தோன்றுகிறது... உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனித்தால் தெரியும் பெரும்பாலான நாட்டு தலைவர்கள் அனைவரும் தனது அதிகாரத்தை உலக அளவில் நிறுத்தி புகழோடு வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு செயல்படுகிறார்கள் என்பது புரியும்... மற்ற படி அங்கே வாழும் ஓட்டு போட்ட ரோட்டோர பிரஜைகள் ரோட்டோரமாகவே தான் இனியும் வாழ்வார்கள்... பிச்சை எடுப்பவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டு தான் இருக்க போகிறார்கள்... இது பொதுவான விதி... அதுவும் பிரிட்டிஷ் என்றாலே அகங்காரமும் அவர்கள் கல் நெஞ்சமும் தான் நம் மனதில் நிழலாடும்...ராணிகளின் தேசமாக இருந்தாலும் ராஜாங்கம் என்பதோ அடிமை சாசனத்தின் வெப்பத்தை தான் மக்கள் வாழ்வில் உமிழ போகிறார்கள்... என்ன ஒரு மாற்றத்திற்காக அதிகாரம் மக்கள் மூளையை சலவை செய்து கை மாற்றப்படுகிறது அவ்வளவே...ரிஷி சுனக் நினைத்து இருந்தால் அங்கே வாழும் சாதாரண பிரஜைகளுக்கு எதுவேனும் செய்து இருந்து இருக்கலாம்.. மாமனார் பணக்காரர் இவர் உலகத்திலேயே மிக பெரிய பணக்காரர்... ஆனால் என்ன பிரயோஜனம்... இங்கே ஜனநாயக மன்னர்கள் ஒரு தர்ம சிந்தனை இல்லாத முட்டாள்கள் என்றால் ஓட்டு போடும் மக்கள் எல்லோரும் எதையும் கூர்ந்து யோசிக்க கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும் அதிமுட்டாள்கள் தான்...எதுவோ இந்த பிரபஞ்சம் இங்கே நடக்கும் எந்த விசயத்திலும் தலை இடாமல் தனது கடமைகளை மௌனமாக ஆற்றி விட்டு அது பாட்டுக்கு போகிறது பாருங்கள் அது போல நாமும் ஒரு பாதையில் ஜனநாயக நாட்டில் அரசாட்சி செய்யும் அதி புத்திசாலிகளின் சூட்சம வலையில் சிக்கி சின்னா பின்னம் ஆகாமல் இருந்தால் சரி தான்...🏃🚣.

#இன்றையதலையங்கம்.

#ஜனநாயகமுட்டாள்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக