சமுத்திரத்தில் செய்யும் பயணத்தில் ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள்!ஆயிரம் ஆயிரம் ஆச்சரியங்கள் ! ஒரு பயணத்தின் ஆனந்தம் அந்த பயணம் முடிவுறும் தருணத்தின் எல்லை நமக்கு தெரியாமல் இருப்பது.அந்த வகையில் சமுத்திர பயணம் நம்மை உற்சாகப்படுத்தும்... என்றேனும் ஒரு நாள் சமுத்திர பயணத்தில் பயணிக்கும் போது என் வாழ்வின் சுமைகளை அந்த சமுத்திரத்தில் தூக்கி எறிந்து விட்டு மிகவும் இலகுவான சிறகோடு அந்த சிறகையும் விரிக்காமல் ஆழ்ந்த அமைதியோடு அந்த சமுத்திரத்தின் பேரழகை கண்களால் பருகி ரசித்துக் கொண்டே செல்ல வேண்டும் நெடுந்தூரம்... தூரம் முடிவற்ற தூரமாக அது இருக்க வேண்டும்.. பகல் இரவு வந்து வந்து போக வேண்டும்.. மழையும் குளிரும் வெயிலும் என் மீது படர வேண்டும்.. எத்தனையோ பௌர்ணமிகள் அந்த பயணத்தில் வந்து சென்றாலும் இதோ இப்போது என்னோடு காதலோடு பயணிக்கும் இந்த பௌர்ணமி நிலவோடு ஒரு காதலை நிகழ்த்தி விடிகின்ற பொழுதில் கரை ஏறி விட வேண்டும்.. அப்போது எனக்கும் அந்த பௌர்ணமிக்குமான அந்த காதலின் தனித்துவத்தை இந்த பிரபஞ்சம் யுகம் யுகமாக பேசி தீர்க்க வேண்டும் ...
#நானும்சமுத்திரமும்
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக