பனி அடர்ந்த அந்த வனத்தில்
சிறு தீ மூட்டி குளிர்காய்கிறேன்...
அந்த மரங்கள் எனக்காக
சிறு அசைவில் சில இசையை இசைக்கிறது...
அருகில் ஓடும் சிற்றோடையோ நான் தனிமையை உணராமல் இருக்க என் கால்களை உரசி
சிறு உரையாடல் நிகழ்த்தி விட்டு பயணிக்கிறது...
நானும் அந்த தீயும் ஏதும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தோம்...
அந்த இரவின் நிசப்தமும்
இங்கே ஏதோவொரு நிகழ்வில் தம்மை இணைத்துக் கொண்டு எதையோ என்னோடு கொண்டாடி விட துடிக்கிறது...
நான் இங்கே பேசாத மௌனியாக அந்த வனத்தின் பேரழகை ரசித்துக் கொண்டே இருக்கும் போது
என் காதருகே அந்த தீ
நீ உன் காதலை என்னோடு கொண்டாடி இந்த இரவை எப்போதும் நினைவு கூறும் இரவாக...
இந்த பிரபஞ்சத்திற்கு
பரிசளித்து செல்வாயா என்று பேச
ஆரம்பிக்கும் போது
நான் என் கடந்த கால காதலின் சுவடை கண்ணீருக்கு
பரிசளித்து விட்டு
பரிசுத்தமான பேரன்போடு
அந்த தீயின் கையை பிடித்து
நடனம் ஆடி என்னுள் கனன்று கொண்டு இருந்த காதலை அந்த தீயின் நாசியோடு..பேரன்போடு... என் சுவாசத்தின் வழியே கலந்து சோர்வாக
அந்த வனத்தில் வீழும் போது
மீண்டும் அந்த நதியே ஸ்பரிசித்து என்னை சகஜ நிலைக்கு கொண்டு
வரும் போது நான் இந்த வனத்தின் நாயகியாக உணர்கிறேன்...
#நானும்வனமும்
#இளையவேணிகிருஷ்ணா.
29/07/24/திங்கட்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக