பக்கங்கள்

செவ்வாய், 13 ஜூன், 2023

மழையோடு நிதானமாக ஒரு நடை

 

அத்தனை ஆக்ரோஷமாக வந்த மழை கொஞ்சம் அடங்கி பெரும் தூறலாக அடர்த்தியாக பெய்கிறது... அந்த மழையில் குடையும் இல்லாமல் துப்பட்டாவையும் தலைக்கு கவசமாக இடாமல் சாலையில் நடக்கிறேன் மிக மிக மெதுவாக மிரட்டும் மின்னலையும் இடியையும் பொருட்படுத்தாமல்.. இத்தனைக்கும் போன மாதத்தில் இங்கே இடி மின்னல் தாக்கியதில் இறந்தவர்கள் அதிகம்.. ஆனாலும் அதற்கெல்லாம் பயந்தால் இயல்பான இந்த நொடி மழையோடு நிதானமாக நடக்கும் ரசனையை இழந்த பெரும் பாவியாவேன்...

என்னை கடந்து செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் நிதானமாக நடந்து செல்லும் என்னை பார்த்து வேகமாக ஒலியை எழுப்பி மிகவும் வேகமாக செல்கிறது... ஏன் இத்தனை அவசரம் என்று அந்த வாகனத்தை பார்த்து விட்டு கன்னத்தில் வழியும் மழையின் முத்தத்தை துடைக்க மனமில்லாமல் நடக்கிறேன்.. இந்த மாதிரி மீண்டும் எப்போதாவது அந்தி மாலைப் பொழுது எப்போது வாய்க்கும் என்ற ஏக்கத்தோடு...

இதோ கொஞ்சம் கொஞ்சமாக மழை நிற்கும் ஒலி என் செவிகளை அடைகிறது.அது முழுவதும் நின்றவுடன் மாடியில் இருந்து வரும் தண்ணீர் சப்தம் மட்டும் தனியான பேரின்ப இசையாக கேட்கும்..அதை ரசித்துக் கொண்டே ஏதோவொரு இசையை கேட்பதில் அலாதி பிரியம் எனக்கு...

இப்போது உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது அது என்ன என்று சொல்லட்டுமா 😊

இங்கே மழை என்று இரண்டு வார்த்தையில் போட வேண்டிய பதிவை இப்படி என்னவோ ஏதோவொன்று வாசிக்க வைத்து எங்கள் நேரத்தை திருடுவதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆவல்...இது தானே நீங்கள் என்னிடம் கேட்க நினைத்த கேள்வி 😊...

மீண்டும் ஒரு மழையோடு நடந்த பயண அனுபவத்தில் சந்திப்போமா நேயர்களே 🎻🙏✨☕☔..

எங்கே ஓடுகிறீர்கள் கொஞ்சம் நில்லுங்கள் 😀

#மழையோடு #ஒரு #நிதானமான #நடை

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக