பக்கங்கள்

வியாழன், 29 ஜூன், 2023

ஆளுநர் அரசியல்

 


இன்றைய தலையங்கம்:-

ஆளுநர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார்.. இதில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று பல அரசியல் கட்சிகளும் விமர்சித்து வருகிறார்கள்... ஆனால் ஒரு விசயத்தை இங்கே நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.. தமக்கு அதிகாரம் இல்லை என்று நன்றாக ஆளுநருக்கும் தெரியும்.. இதன் மூலம் ஆளும் அரசிற்கு ஒரு தர்ம சங்கடமான நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்... அதாவது இவர்கள் சட்ட ரீதியாக அணுகும் போது மக்களிடையே பெரும் அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்பதே அவரது நோக்கம்.. இதற்கு இடம் கொடுக்காமல் முதலமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து சட்ட ரீதியாக அவருக்கு உதவி இருக்கலாம்.. அல்லது செந்தில் பாலாஜியே பதவியை ராஜினாமா செய்து விட்டு வழக்கை சந்தித்து விடுதலையாகி அமைச்சர் அரசியல் பயணத்தை தொடரலாம்.. எப்படி பார்த்தாலும் இது ஆளும் அரசாங்கத்தை தர்ம சங்கட நிலையில் வைத்திருக்கவே இந்த ஏற்பாடு என்பது திண்ணம்..இதை புரிந்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டும்.. இப்படி இருந்தால் இப்படி நடக்க நிறைய வாய்ப்பு உள்ளது அதற்கு நாம் இடம் கொடுக்கலாமா என்று ஒரு பழமையான அரசியல் கட்சி சிந்தித்து இருக்க வேண்டும் ...இது தான் அரசியல் சாணக்கியதனம்..அதை ஆளும் அரசு புரிந்துக் கொள்ளாமல் இருந்தது தான் இப்போது இந்த தர்ம சங்கட நிலை.. எப்படியோ இப்போதும் சட்ட ரீதியாக தானே அணுக போகிறார்கள்..அதை அவரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து அணுகி இருக்கலாமே.. இதில் ஏன் இந்த ஈகோ பிரச்சினை.. இப்போதும் பிரச்சினை சிக்கல் மேல் சிக்கலாக செல்வதற்கு சமயோசிதமாக யோசிக்காதது தான் காரணம்.. இது ஆளும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த ஆளுநர் எடுத்த முடிவு.. இப்படி முடிவெடுக்க முடியாது என்று தெரிந்தும் முடிவெடுத்து இருக்கிறார்.. இதில் அனுதாபம் தேட முடியாது என்று நன்கு அவருக்கு தெரிந்து இருக்கிறது.. இப்போது யோசியுங்கள்.. சமயோசிதமாக யார் முடிவெடுத்து இருக்க வேண்டும் என்று??? எல்லாமே இங்கு கணக்கு தான் 🐾🤫

#செந்தில்பாலாஜிஅமைச்சர்

பதவியில் இருந்து நீக்கம்.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக