பக்கங்கள்

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

கிரகண கவிதை


தனக்கென்று இருக்கும் 

பூரணத்துவத்தை தனித்துவத்தை 

இழந்துக் கொண்டு இருக்கும் 

துக்ககரமான நிலையில் 

அந்த சபையில் பாஞ்சாலியின் 

துகில் உரிப்பை வேடிக்கை பார்த்ததை போல ஒரு கூட்டம் 

இங்கே வெட்டவெளியில் வேடிக்கை பார்க்கிறது...

அந்த நிலவோ தன் கௌரவத்திற்காக அந்த பெரும் மேகக் கூட்டத்திடம் 

போராடும் போது 

எங்கிருந்தோ வந்த காற்று 

இன்னும் சிறு சிறு மேகக் கூட்ட படைகளை சேர்த்து 

பெரும் மழை பொழிவித்து 

அந்த நிலவின் கௌரவத்தை 

காப்பாற்றியதில் 

நான் பெரும் மூச்சோடு 

நிம்மதியடைந்து 

கண்ணீர் மல்க சூட்சமமாக 

வருணனுக்கு நன்றி சொல்கிறேன்...

அங்கே பலபேர் அதே வருணனை 

இப்படி காரியத்தை 

கெடுத்து விட்டாயே என்று 

வசை பாடி செல்கிறார்கள் 

பலர்...

இங்கே ஒரு கிரகணம் 

சாகடிக்கப்பட்டது...

பாரத போரில் இறந்த 

துச்சாதன் போல...

கிரகண கவிதை..

இளையவேணி கிருஷ்ணா 

நாள் 08/09/25/திங்கட்கிழமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக