சில வயதுக்கு பிறகு
வாழ்க்கை ஒரு வேடிக்கை!
தனிமையில்
பழைய நினைவுகள்
நிழலாக தொடர அதன் அடியில் வலுக்கட்டாயமாக
இளைப்பாறுகிறேன்!
சன்னல் வழியே பார்வை
செலுத்தும் போது
அங்கங்கே சீறி பாயும் வாகனங்களை வறட்சியான
சிரிப்போடு வேடிக்கை பார்க்கிறேன்!
நானும் அந்த சாலையில்
இப்படி தான் ஒரு நாள்
பரபரப்பாக அந்த சாலையில்
ஓடி இருக்கிறேன்...
மனதில் ஆயிரம் ஆயிரம் கோபத்தையும் சஞ்சலத்தையும்
சுமந்துக் கொண்டு...
சற்றே திரும்பி பார்க்கும் போது எனது ஓட்டம் எல்லாம்
வெற்று ஆராவாரமாகவே
எனக்கு தோன்றுகிறது!
தற்போது நினைத்து பார்க்கிறேன்...
இன்னும் கொஞ்சம் ஆசுவாசமாக ரசித்து வாழ்ந்து இருக்கலாமோ என்று...
நான் அமர்ந்து இருக்கும் நாற்காலியும் எனக்கு காட்சிக்கு வழி விட்ட
இந்த சன்னலும்
என்னை பார்த்து புன்னகைக்கிறது...
நீ அன்றொரு நாள் ஓடிய போதும் நாங்கள் இங்கே தான் இருந்தோம் என்று...
வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமான நகர்வு என்பதை நாள் கடந்து உணர்கிறேன் என்றாலும்
இதோ எனக்காக பொறுமையாக காத்திருந்த இந்த நாற்காலிக்கும்
அந்த சன்னலுக்கும் ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக் கொள்வதில் தான் இப்போது
எனது மனம் ஆனந்த கூத்தாடுகிறது...
வயதின் நகர்வில் தொலைந்து விட்ட
என் வாழ்க்கை பயணத்தை
மீதி இருக்கும் காலத்தில் தொலைத்து விடாமல்
நொடிகள் தோறும் ஆனந்த ஸ்பரிசத்தை அனுபவித்து தொலைக்கிறேன்...
இப்போது என் மனம் ஆழ்ந்த அமைதியடைகிறது...
இழந்து விட்ட வாழ்வின் சுவாரஸ்யத்தை மீட்டு விட்ட மகிழ்வில்...
#வயதின்நகர்வில்...
#வாழ்வின்சுவை(6).
#இளையவேணிகிருஷ்ணா.
நேரம் காலை 8:00மணி.
05/09/2023.
மீள் பதிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக