அந்த மலையின் உச்சியில்
இருந்து பார்க்கிறேன்
நான் வாழ்ந்து வரும்
பூமியின் இருப்பிடத்தை...
அங்கே நெடிதுயர்ந்து வளர்ந்த
கட்டிடங்கள் எல்லாம்
சிறு அட்டை பெட்டி போல
காட்சியளிக்கிறது
என் பார்வைக்கு...
அங்கே போய் வரும் மக்கள்
எல்லோரும் சிறுசிறு பூச்சிகள்
இங்கும் அங்கும் நகர்வது போல்
என் கண்ணுக்கு விருந்தளிக்கிறது...
ஒரு கணப் பொழுதில்
இங்கே எல்லாம் மாறி விட்டதா என்று
புன் முறுவலோடு
யோசித்துக்கொண்டே
அங்கே நிகழும்
அத்தனை காட்சிகளையும் வேடிக்கை
பார்க்கிறேன்...
இங்கே நான் மட்டும் என்ன
அங்கே போவோர் வருவோர்
சிறிது உற்று நோக்கினால்
நானும் ஒரு சிறு புள்ளி தானே..
இங்கே காட்சிபிழையில் தான்
இந்த உலகம் சுழலுகிறது
அதற்குள் எத்தனை எத்தனை மாயைகள் என்னை நிதானமாக
மென்று தின்று தீர்க்க அலைகிறது என்று
யோசித்துக் கொண்டு
இருக்கும் போதே என் அருகில்
மிகவும் நிதானமாக
ஒரு பட்டாம்பூச்சி 🦋
தன் சிறகால் உரசி
தன் மெல்லிய மொழியில்
ஆமோதித்து சென்றதை
நானும் அந்த
நுண்ணிய காலமும்
இந்த பிரபஞ்சத்தின்
சூட்சம விதியும் மட்டுமே உணர்ந்து
புன்னகையுடன் கை
குலுக்குகிறோம்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 08/09/25/திங்கட்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக