பக்கங்கள்

வியாழன், 31 ஜூலை, 2025

நீ பயணிக்கும் அந்த பெரும் காட்டில் நான்...


அந்த தேடல் இப்போது 

அவசியம் தான் என்று 

தோன்றுகிறது...

நீ பயணிக்கும் அந்த பெரும் காட்டில் 

நானும் சத்தம் இல்லாமல் 

பயணிக்கிறேன்...

உன்னை தொந்தரவு செய்ய 

தோன்றாத இந்த பயணத்தில் 

நான் உன்னோடு 

உனக்கு தெரியாமல் 

எவ்வளவு தூரம் 

எவ்வளவு காலம் பயணிப்பேன் 

என்று நிர்ணயம் செய்ய முடியாது!

நிர்ணயம் செய்ய முடியாத 

இந்த விசயத்தை நான் 

நேசிக்கிறேன்...

அதில் பெரும் காதல் 

சத்தம் இல்லாமல் 

தீப்பிடித்து எரிகிறது!

#இளையவேணி கிருஷ்ணா.

நாள்:01/08/25

வெள்ளிக்கிழமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக