எத்தனை நாள் தான் இப்படியே மறைந்து மூச்சடக்கி வாழ்வது
என்று கேட்கும் விதைகளின் சூட்சம பாஷையை கூர்மையாக கேட்டு
நிலம் கடத்தி விடுகிறது
அந்த கருமேக கூட்டத்தில்...
அதுவோ எங்கெங்கோ சிதறி கிடந்த மேகக் கூட்டத்தை கூட்டி
உயிர் பிச்சை இட்டதில்
நிலமெனும் தாயும்
விதை எனும் சேயும் நிம்மதி பெருமூச்சு அடைவதை பார்த்து
அங்கிருந்த கருணை நெஞ்சம் கொண்ட விவசாயி ஆறுதல் அடைகிறார் கண்களில் வழிந்த ஆனந்த கண்ணீரை துடைக்க மனமில்லாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:01/08/25/
வெள்ளிக்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக