பக்கங்கள்

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

துயரத்தின் சாயல்...


கரையில் வேடிக்கை பார்த்த வீடுகள் 

திடீரென்று வந்த பாசத்தின் 

அணைப்பில் திக்குமுக்காடி 

அந்த வெள்ளத்தில் இரண்டற கலந்து 

பூமியில் அழுந்தி விடுவதை பார்த்து 

நான் இங்கே விக்கித்து கரை மேலே 

கண்ணீரோடு நிற்கிறேன்...

என்னையும் பெரும் காதலோடு 

அணைத்துக் கொண்டு 

நெடுந்தூரம் பயணிக்கிறது 

வெகு ஆக்ரோஷமாக 

தனது வாயில் 

என்னை திணித்துக் கொண்டு 

அந்த நதி எனும் பெயரில் 

இதுவரை அழைக்கப்பட்ட 

ஊழியாறு...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக