பக்கங்கள்

சனி, 27 செப்டம்பர், 2025

பகுத்தறிவு இருக்கிறதா நமது மக்களிடம்?

 


இன்றைய தலையங்கம்:- அரசியல் புரிதல் என்பது சிறிதும் இல்லாத நன்கு படித்து மேலை நாடுகளில் வேலை பார்க்கும் ஆற்றல் மிக்க இளைஞர்கள் கொண்ட நாடு தமிழ் நாடு என்று ஒரு பக்கம் பெருமையாகவும் மறு பக்கம் மிகவும் வருத்தமாகவும் தான் எண்ண தோன்றுகின்றது ...

அரசியல் என்பது மக்களின் சேவைக்காக என்பதை அரசியல்வாதிகளோ மக்களோ புரிந்துக் கொள்ளாதவரை இப்படி தான் தாம் பலியாவதே தெரியாமல் பலியாவார்கள்...

அந்த காலத்தில் அறிவார்ந்த இலக்கிய பேச்சை ரசிக்க கூடும் ஒரு கூட்டம்... தற்போது விஞ்ஞானம் வளர்ந்து விட்ட பிறகு யார் கூட்டத்தை கூட்டினாலும் போகவே அவசியமே இல்லையே... ஏதோவொரு வகையில் நமக்கு செய்திகள் வந்து சேர்ந்து விடும் காலத்தில் ஒரு திரை நட்சத்திரத்தின் அரசியல் பிரவேஷத்தின் சாதாரண பேச்சிற்காக ஏன் இத்தனை பேர் சென்றார்கள்...

இனி எந்த அரசியல் கட்சிகளும் இப்படி மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் கூட்டத்தை கூட்டுவதற்கு பேனர்கள் வைப்பது உட்பட அனைத்திற்கும் தீவிர கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்...அது ஆளும் கட்சியாக இருந்தாலும் கூட...

மக்களும் ஏன் இப்படி எவர் பின்னேயும் போக வேண்டும் என்று யோசிக்க வேண்டும்... தேர்தல் நெருங்கி வருவதால் இப்படி நிறைய காட்சிகள் அரங்கேறும்... இப்படியான சோக காட்சிகளுக்கு மக்கள் தமது விலை மதிப்பற்ற உயிரை கொடுத்து விட்டால் அந்த குடும்பம் நிர்க்கதியாக நிற்க வேண்டி வரும் என்று யோசித்து செயல்பட வேண்டும்..

யோசியுங்கள் மக்களே... இங்கே உங்களுக்கு நீங்களே தான் பாதுகாப்பு கொடுத்து கொள்ள முடியும்... உங்கள் உயிர் விலை மதிப்பற்றது 🙏.

#இன்றையதலையங்கம்.

நாள்:28/09/25/ஞாயிற்றுக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக