என் உடலின்
அந்த ரணத்தை கீறி
ஏதேனும் வாழ்வின் தொன்மம்
மறைந்து கிடக்கிறதா என்று
தேடி தேடி பார்க்கிறேன்...
அந்த வழிந்தோடும் இரத்தமோ
இங்கே ஏதோவொரு
எனக்கு ஒவ்வாத பெரும் நாற்றத்தை
என் மீது உமிழ்ந்து என்ன கேட்கிறாய் வாழ்வின் தொன்மமா அது என்ன என்று என்னை கேலி செய்கிறது...
இங்கே அவமானங்கள் தான்
வாழ்வின் தொன்மமோ என்று
என்னை தேற்றிக் கொண்டு
பயணிக்கிறேன்...
அந்த ரணத்தின் வலியை
குணப்படுத்த முடியுமா என்று...
இங்கே என்னோடு ஒட்டிக் கொண்ட
எதனாலும்
பிரயோஜனம்
இல்லை என்று
தெரிந்த பின்பும் அதை சுமந்து
இங்கும் அங்கும் ஓடித் திரியும்
நான் யார் என்று
முணுமுணுத்த போது
அங்கே ஒரு அசரீரி
நீ ஒரு வாழ்வின் தொன்மத்தின்
எச்சத்தில் பிழிந்தெடுத்த முட்டாள்
என்றது...
மீண்டும் நான் குழம்பி போகிறேன்
வாழ்வின் தொன்மத்தின்
அர்த்தம் தான் என்ன என்று
களைத்து சோர்ந்து அமர்கிறேன் தலை மீது கை வைத்து...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:02/09/25/செவ்வாய்க்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக