நீரோடே ஓடி எதை பற்றியும் கவலைப்படாமல் பயணம் செய்யும் அந்த நதியின் வழியில்
எனது பயணமும் நிச்சலனமாக எந்தவொரு ஆராவாரமும் இல்லாமல் தொடர்கிறது...
அதோ அங்கே பறந்துக் கொண்டே கீழே ஓடும் நதியில் இறங்கி தனது தாகத்தை தீர்த்துக் கொண்டு
தனது சிறகினிலே ஒட்டிக் கொண்டு இருந்த நீர் திவலையை உதிர்த்து ஆசீர்வாதம் செய்து விட்டு எட்டி பறக்கும் அந்த பறவையை போல நானும் என்னோடு
சிறிது தூரம் பயணம் செய்த மக்களுக்கு எனது ஆதரவான பேச்சின் மூலம் ஆறுதல் சொல்லி விட்டு நிதானமாக அந்த பறவையையும் அந்த நதியையும் சிறிது புன்னகையோடு பார்த்து விட்டு
பயணிக்கும் வேளையில்
அங்கே சூரியன் தனது மெல்லிய கிரணங்களால் எனக்கு விடை கொடுத்து விட்டு
மெல்ல மெல்ல மறைகிறது...
அங்கே அந்த மரத்தின் கிளையில் சில குருவிகளின்
ஓசையில் நானும் ஆனந்த பரவசத்தில் மூழ்கி அந்த சாலையில் மெதுவாக நடக்கிறேன்...
இந்த பிரபஞ்சத்தில் எங்கோவொரு மூலையில் இன்னும்
ஒட்டிக் கொண்டு இருக்கும் பாசத்தின் சுவடை உணர்ந்துக் கொண்ட ஒரு அபூர்வ மனிதனின் சாயலில்...
#இளையவேணிகிருஷ்ணா
நாள்:23/08/25/சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக