பக்கங்கள்

வியாழன், 7 நவம்பர், 2024

சித்த நிலை யாதென்று புரிகின்ற வேளையில்...


சித்த நிலை யாதென்று 

புரிகின்ற வேளையில் 

சுவையுள்ள பதார்த்ததின் வாசம் 

நாசியை வசீகரிக்கிறது...

சுத்தமான ஆத்மாவின் 

தீராத தாகத்தை

கண்டுக்கொள்ளாமல் 

அந்த வேளையில் 

உதாசீனம் செய்து 

உருண்டோடி செல்லும் காலத்தை 

தினம் தினம் திட்டி தீர்க்கிறேன்...

அந்த ஆன்மாவின் தாகத்தை 

நான் தீர்க்க வழி இல்லாமல் 

நான் தவிக்கும் போது 

நீ ஏன் அதிவேகத்தில் 

இவ்வளவு அவசரம் கதியில் 

என்னை இழுத்து செல்கிறாய் 

என்று...

காலமோ எந்த பதிலும் சொல்லாமல் 

என்னிடம் இருந்து 

விடை பெறுகிறது 

ஒரு சிறு காலி கோப்பையின்

பெரும் தேவையான 

தேநீர் தாகத்தை 

இங்கே ஒரு துளி தேநீரில் 

தணிந்து விடுமா என்ன 

என்று மனதிற்குள் 

நினைத்துக் கொண்டு... 

#இரவு கவிதை 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/11/24/வியாழக்கிழமை.