பக்கங்கள்

புதன், 27 நவம்பர், 2024

அந்த நதியின் கண்ணீரை யார் துடைக்கக் கூடும்?


நான் பயணிக்கும் இந்த சாலையில் 

கொஞ்சம் 

இளைப்பாறிக் கொள்ள நினைத்து 

என் சுமைகளை தலயணையாக்கி 

கண்களை மூடி 

என் கண்கள் சிந்தும் கண்ணீரோடு 

அந்த சாலையின் நடுவில் 

என் இருப்பிடம் இதுதானோ இனி 

என்று கொஞ்சம் நான் பயந்து 

கலங்கி இருக்கும் போது 

என் அருகே சத்தம் இல்லாமல் 

அந்த ஜீவன் 

படுத்துக் கொண்டது...

கொஞ்சம் அதன் அருகாமையை 

உணர்ந்து 

கண் விழித்து பார்த்தேன் 

வழியும் கண்ணீரோடு... 

அதுவோ எந்தவித 

சலனமும் இல்லாமல் 

ஏதோவொரு பாதுகாப்பை 

உணர்ந்ததை போல 

கண்களை மூடி உறங்குவதை 

நான் பார்த்த போது அதன் முகத்தில் 

அந்த நிம்மதியை உணர்ந்து 

என் சோகத்தின் சுவடை 

அழித்து விட்டு நானும் 

அதன் துணை ஒரு ஆறுதலாக 

கண் அயர்ந்து உறங்க 

முயல்கிறேன்....

இங்கே இந்த பிரபஞ்சம் 

எல்லோரையும் 

அரவணைத்துக் கொண்டு தான் 

பயணிக்கிறது...

ஒரு சாந்தமான நதியை போல....

அதை உணராமல் 

பல ஜீவன்கள் இங்கே 

அதன் அரவணைப்பில் இருந்து 

திமிறிக்கொண்டு பயணிக்கும் போது 

அந்த நதியின் கண்ணீரை 

இங்கே யார் துடைக்கக் கூடும்???

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/11/24/புதன் கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக