பக்கங்கள்

திங்கள், 14 அக்டோபர், 2024

இன்றைய தலையங்கம்: இயற்கை நடத்தும் பாடம்

 

இன்றைய தலையங்கம்:-

இயற்கை நடத்தும் பாடம்:- ஓட்டு அரசியல்... நகரமயமாக்கல் நிறுத்த தைரியம் இல்லை... கிராமப்புறங்களிலும் மற்றும் பரவலாக வேலைவாய்ப்பு உருவாக்கி மக்கள் ஒரே இடத்தில் குவியாமல் தடுக்க எந்தவித முற்போக்கு சிந்தனையும் இல்லை... வேளாண்மை சார்ந்த தொழில்களில் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யுங்கள் என்று போற போக்கில் சொல்லி விட்டு செல்லும் அரசாங்கம் அதற்கான நிறுவனத்தை நிறுவவோ அல்லது அவர்களே நிறுவிக் கொள்ளவோ உதவி செய்தல் இல்லை... நாட்டின் ஜிடிபி இதில் தான் உள்ளது...ஆனால் அந்த தானியங்களை பாதுகாத்து வைக்க நவீன மயமாக்கப்பட்ட குடோன்கள் ஒவ்வொரு கிராமம் வாரியாக செய்து தர யோசிப்பது இல்லை... நகரத்தில் வீடு கட்ட வதவதவென்று அதிகாரம் வழங்கி விடுவது அதில் வர போகும் சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல்... இப்படி பல விசயங்களை சொல்லி கொண்டே போகலாம்... ஆனால் மேம்பாலம் மீது கார் நிறுத்துவது இங்கே பெரிதாக பேசப்படுகிறது... ஆனால் ஒவ்வொரு விவசாயியும் தனது உயிர் துளியை சிந்தி உரமாக்கி விளைவித்த நெல் முதலான தானியங்களை மழையில் நனைந்து கொண்டே அள்ளி அள்ளி சாக்கில் பிடிக்கும் காட்சிகளை எத்தனை முறை பார்த்தாலும் அலட்சியம் செய்யும் அரசு... மக்கள் வரிப்பணத்தில் போக்குவரத்து வசதிக்காக செய்யப்பட்ட வேளச்சேரி மேம்பாலத்தில் கார் நிறுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று தகவல்கள் வருகிறது... சபாஷ்... முதலில் வீடு கட்டும் போதே அந்த ஏரியா அதற்கு தகுதி உடையது தானா என்று ஆராய்ச்சி செய்யாமல் ஏன் வாங்குகிறீர்கள்... மேலும் சென்னை முக்கால் வாசி அந்த காலத்தில் ஏரியாக இருந்து உள்ளது... மேலும் இந்த அரசாங்கம் தான் முட்டாள்தனமாக அங்கே குடியேற அனுமதிக்கிறது என்றால் மக்களாகிய உங்களுக்கு எங்கே மதி போனது என்று தான் கேட்க தோன்றுகிறது...

எதுவோ எப்போதும் நீண்ட கால திட்டம் பற்றி யோசிக்காமல் செய்யும் எந்த செயலும் மோசமான விளைவுகளை தான் ஏற்படுத்தும் என்பதை இயற்கை நமக்கு உணர்த்திக் கொண்டே உள்ளது ஆழ்ந்த நிகழ்வுகள் மூலம் என்பது மட்டும் மறுப்பதற்கு இல்லை...

#இன்றைய தலையங்கம்

#இயற்கை நடத்தும் பாடம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/10/24/செவ்வாய் கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக