பக்கங்கள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

விடை தெரியா கேள்வி ஒன்று...

 


விடை தெரியா கேள்வி ஒன்று 

பல யுகங்களாக இங்கும் அங்கும் 

அலைந்து திரிந்து கொண்டு 

இருக்கிறது என்னுள்ளே...

ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் 

நான் ஜனனம் எடுக்கும் போது 

என்னை நோக்கி 

முதலில் அழுகை மூலம் துவங்கிய 

அந்த கேள்வி இன்னும் 

முடிந்தபாடில்லை...

இந்த முறை சலித்து விட்டு 

நான் கொஞ்சம் காலத்திடம் 

எரிச்சலாக கேட்கிறேன் ...

ஏன் இந்த ஒற்றை கேள்வியை 

இப்படி அநாதரவாக அலைய 

விடுகிறீர்கள் ?

உங்களுக்கு தெரியும் தானே 

அதை சொல்லி விட்டு கொஞ்சம் 

எனை கடந்து சென்றால் தான் என்ன 

என்று கோபத்தோடு கேட்கிறேன்...

காலம் எனது கோபத்தை 

சிறிதும் மதியாமல் நீ எனக்கு காலம் 

காலமாக என்னோடு பயணிக்கும் 

உற்ற தோழி...

நீயே அந்த கேள்விக்கான பதிலை 

கொஞ்சம் ஆசுவாசமாக அமர்ந்தால் 

கண்டுபிடித்து விடுவாய்...

கண்டுபிடித்து விட்டால் 

நீ என்னோடு பயணிப்பது 

சுத்தமாக நின்று விடும்..

நான் பித்து நிலையை 

அடைவேன் அல்லவா 

அதனால் தான் உன்னை அப்படி 

ஆசுவாசப்படுத்திக் கொள்ள

விடாமல் துரத்திக் கொண்டே 

நான் இருக்கிறேன்...

உன் மீது கொண்ட காதலால்

என்ற காலத்தை பார்த்து 

ஒரு முறைப்பு முறைத்து விட்டு 

நான் எனது பயணத்தை 

தொடர்ந்தேன் 

அந்த விக்கிரமாதித்தன் போல...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/09/24/சனிக்கிழமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக