தடம் மாறிய நதியென்று இங்கே
எதுவும் இல்லை...
தன் பயணத்தின் சூட்சமத்தை
ஒரு போதும் அது மறப்பதும்
இல்லை...
இங்கே பலராமரை போல
மது அருந்திய மயக்கத்தில்
ஒரு நதியின் பாதையை
மாற்றி விடலாம் தான்...
தன் சுயத்தை மறக்காத
அந்த நதியின் வழி தடத்தில்
காத்திருக்கும் ஆயிரம் ஆயிரம்
கூழாங்கற்கள்
ஒரு மௌன சாட்சியாக
காட்டிக் கொடுத்து விடும்
அது மட்டுமல்ல ...
அந்த நதியை தேடி உருண்டோடி
அணைத்துக் கொள்ள துடிக்கும்
அந்த கூழாங்கற்களின்
பெரும் காதலின் ...
சுவாசத்தின்...
உருண்டோடும்
ஓசையை இங்கே
அந்த நதியை தவிர
மற்றவர்களுக்கு
வெறும் இரைச்சலாக தான்
அறியக் கூடும் அல்லவா?
#கூழாங்கற்களின்காதல்.
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:04/08/24/ஞாயிற்றுக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக