பக்கங்கள்

சனி, 13 ஜனவரி, 2024

நிகழ்வு பறைசாற்றும் உண்மை

 


நேற்று அரங்கன் கோயிலுக்கு சென்று இருந்தேன்... ஸ்வாமி தரிசனம் செய்வதற்காக அல்ல.. ஒரு பணி நிமித்தமாக நேற்று திருச்சி செல்ல வேண்டி இருந்தது.. நானும் என் கணவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று இருந்தோம்.. பணிகள் கிட்டத்தட்ட மதியம் நெருங்கும் வேளையில் முடிந்தது.. சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று என்னிடம் என் கணவர் சொன்னார்.. சரி அதனால் என்ன திருவரங்கம் கோயில் மண்டபத்தில் சிறிது நேரம் சயனம் கொண்டு எழுங்கள் என்று சொல்லி அவரை அழைத்துச் சென்றேன் கோயிலுக்கு... கோயிலுக்குள் செல்லும் போதே அங்கே வந்து நான் பெருமாளை பார்த்து விட்டு தான் வருவேன் என்று பிடிவாதம் செய்யக் கூடாது என்று சொல்லி தான் அழைத்துச் சென்றார்.. சரி எனக்கும் பெருமாளை பார்க்கும் எண்ணம் இல்லை என்று சொல்லி விட்டு உள்ளே நுழைந்தேன்.. கையில் வைத்திருந்த பையில் புதிதாக வாங்கிய காலணி அடங்கிய அட்டைப் பெட்டி இருந்தது..உள்ளே நுழைவதற்கு முன்னர் எனது கணவர் காலணி எல்லாம் எடுத்து சென்றால் உள்ளே விட மாட்டார்கள் இளையவேணி என்றார்...அட வாங்க அதெல்லாம் விடுவார்கள் என்று சொல்லி போனால் அங்கே பரிசோதகர் உங்கள் பையில் என்ன இருக்கிறது என்று கேட்டார்.. நான் செருப்பு இருக்கிறது என்று சொன்னேன்.. அதெல்லாம் உள்ளே அனுமதி இல்லை அம்மா..அதை அங்கே வெளியே காலணி பாதுகாக்கும் இடத்தில் வைத்து விட்டு வாருங்கள் என்றார்..நானோ இது புதிதாக வாங்கிய காலணி தானே இதை ஏன் அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்றேன்..புதிதோ பழையதோ செருப்பு செருப்பு தானே அம்மா..அதை வெளியே வைத்து விட்டு வாருங்கள் என்றார்.. என் கணவரோ என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு நீ வா போகலாம்... இளைப்பாறிய வரை போதும் என்று வெளியே வந்து வண்டியை அதி வேகமாக ஓட்டி இல்லம் வந்து சேர்ந்து தான் ஓய்வெடுத்தார்...இதை எதற்காக சொல்ல வருகிறேன் என்றால்.........

வேண்டாம் உங்கள் கணிப்பிற்கே அதை விட்டு விடுகிறேன்...

இதில் அரசியல் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல 😌😌😌.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 13/01/24.

#நிகழ்வில்ஒருநிதர்சனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக