பக்கங்கள்

சனி, 8 ஜூலை, 2023

நானும் என் இருமலும் எமன் எனும் காதலனும் ...

 


இந்த இரவை இருமலுக்கு அர்ப்பணித்து விட்டேன்...

இந்த இரவை கழிப்பது எளிதல்ல.. அந்த எமனின் பாச கயிற்றில் சிக்கி தவிக்கும் உயிரை போன்ற போராட்டமாகவே அது இருக்கும்.. தும்மினால் யாரோ நினைக்கிறார்கள் என்று சொல்லும் உலகம் இருமினால் யார் நினைக்கிறார்கள் என்று சொல்லவில்லை.. என் கணிப்பு படி எமனாக தான் இருக்கும்..நிச்சயமாக எமனின் காதலியாக இன்னும் எத்தனை நாட்கள் இருக்க போகிறேன் என்று தெரியவில்லை.. ஆனாலும் எமன் அவ்வளவு எளிதாக என்னை அவன் காதல் வலையில் விழ வைத்து விட்டாலும் நான் எவருக்கும் அகப்படாத பயணமாகவே இந்த ஜென்மத்தில் செல்ல நினைக்கிறேன்.. காதல் என்பது கட்டுப்படுத்துவது... அது எமனாக இருந்தால் காதலிக்க ஆசை தான்.. ஆனால் இந்த இருமல் முடிந்ததும் அவன் சென்று விடுவான்.. நிலையற்ற உலகில் இங்கே எதுவும் நிரந்தரம் இல்லை என்று என் மனதை சமாதானப்படுத்தி என் அமைதியான வாழ்வை மீட்க இந்த இரவோடு போராட ஆயத்தமாகி விட்டேன்.. இல்லை இல்லை நானும் இந்த இருமலும் நெடுங்கால காதலை மீட்டெடுத்து உறவாட போகிறேன்.... இங்கே பூரணமான காதலை எனக்கு அந்த இருமலை தவிர தற்போது எவர் தர இயலும்???

#இருமலின்காதல்

#இந்த #இரவும் #நானும் #என்காதலனும்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக