பக்கங்கள்

வியாழன், 20 அக்டோபர், 2022

காலமும் நானும்(3):-

 காலமும் நானும்:-



நான் மிகவும் சோகமாக இருப்பதை பார்த்து காலம் ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய் என்று ஆறுதலாக கேட்டது.. நான் ஒன்றும் இல்லை என்று சமாளித்தேன்.. இல்லை நீ இப்படி சோகமாக இருந்து நான் பார்த்தது இல்லை என்றது.. என்னோடு பயணிக்கும் மனிதர்களை விட காலம் என்னை உன்னிப்பாக கவனித்து வருவதை நினைத்து கொஞ்சம் பெருமையாக இருந்தது..

நீ எனக்கு ஒரு உதவி செய்வாயா என்று கேட்டேன்.. என்ன சொல் என்றது மிகவும் பரபரப்பாக.. அந்த பரபரப்பு என் மீது அது கொண்ட பேரன்பு என்பதை என்னால் உணர முடிந்தது.. என்னிடம் இருந்து கொஞ்சம் கூட தர்ம சிந்தனை இல்லாதவர்களை விலக்கி விடு என்றேன்.. ஏன் அப்படி சொல்கிறாய்?.

இங்கே சூரியன் வெறுப்பு வெறுப்பற்ற நிலையில் தானே பயணிக்கிறது..அதே போல நீ இருந்து விடு என்றது..

ஆனால் நான் அவர்களோடு பயணிக்கும் போது என் தர்ம சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக என்னையும் அறியாமலேயே விடுபட்டு விடுமோ என்று எனக்கு பயமாக உள்ளது என்றேன்.

உன்னால் அப்படி இருக்க முடியாது.. எனக்கு அது நன்றாக தெரியும்..உன்னை பற்றி உன்னை விட எனக்கு தான் தெரியும் என்றது கொஞ்சம் புன்னகைத்து..

நான் அதன் புன்னகையில் சிறு ஆறுதல் அடைந்தேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

#காலமும்நானும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக