ஒரு தேநீர் கோப்பையோடு
நிலவை ரசிக்க கிடைத்த
இந்த நேரத்தில்
எந்தவித மனிதர்களின்
தொந்தரவும்
இல்லாமல் ...
துரத்தும் கவலைகளை
கொஞ்சம் தூர இறக்கி
வைத்து விட்டு ...
நான் அந்த நிலவை ரசித்து
தேநீரோடு பருக
அந்த தென்றலின் தீண்டலில்
என் கூந்தல் அலைபாய ...
நான் அந்த நிலவை நேசிப்பதாக
கிசுகிசுத்து வைக்கிறேன்...
அந்த ரகசியத்தை
தென்றல் களவாடி
அந்த நிலவிடம்
ஒப்படைக்க...
அங்கே நான் இறக்கி வைத்த
கவலைகள்
மெதுவாக என்னை தேடி
அங்கே அலைந்து கொண்டு
இருக்கிறது...
நானோ அது என் முதுகில் ஏறி
சவாரி செய்யும் நேரம் வரை
இந்த நிலவோடு
சற்றே காதல் மொழி பேசி
கரைகிறேன்...
இங்கே காதலின் தீராத
தாகத்தில் கொஞ்சம்
தாக சாந்தி அடைந்துவிடுவதை
யார் தான் விரும்பாதவர்கள்
இங்கே?
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:31/07/26.
பின் குறிப்பு:-
இந்த மாதத்தின் இறுதி கவிதை ❣️

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக