#இன்றையதலையங்கம்:-
#இந்த தேசத்தின் சாபமா அரசியல்வாதிகள்:-
ஒரு மனிதனின் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு... பிறகு தான் எல்லாமே.. ஆனால் அந்த உணவை விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த நாட்டில் என்ன மரியாதை கிடைக்கிறது என்று பார்த்தால் நிச்சயமாக மனது வேதனை அடைகிறது.. ஒரு விவசாயியின் மன வேதனை மற்றொரு விவசாயிகளுக்கு தான் தெரியும்.. இங்கே பல நிகழ்வுகளை அரசியல் விவாதம் செய்யும் மீடியாக்கள் எல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்களுக்குள்ளாக்கும் வகையில் விவாதம் நடத்தி விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டாமா? பத்தோடு பதினொன்றாக செய்திகளை சொல்லி விட்டு போய் விட்டால் போதுமா என்று கேள்வி நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழுகிறது...
பெரும்பாலான அரசியல்வாதிகள் பினாமி பெயரில் கோடிக்கணக்கில் சம்பாதித்த சொத்தை எழுதி வைக்கிறார்கள்... அந்த செலவு ஆகுமா டெல்டா விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்யும் வரை பாதுகாத்து வைக்க குடோன்கள் கட்ட என்று கேட்க தோன்றுகிறது...
ஒரு பயிரை விளைய வைத்து அதை களம் வரை கொண்டு வர எத்தனை இன்னல்கள் சந்திக்க வேண்டி உள்ளது என்று ஒரு விவசாயியை சந்தித்து கேட்டு பாருங்கள்..
இங்கே நமது நாட்டில் எல்லாமே அரசியலாக்கப்படுகிறது என்பது தான் மிகவும் வேதனையான விஷயம்..
எந்த நாட்டிற்கும் கிடைக்காத காலநிலை நமது நாட்டிற்கு கிடைத்து இருக்கிறது... எத்தனை நாடுகள் பசி பட்டினியால் அவதிப்படுகிறார்கள் என்று கூகுளில் தேடி பாருங்கள்..
பசியால் காசா பகுதியில் மக்கள் படும் துயரத்தை நீங்கள் மீடியாவில் பார்த்து இருப்பீர்கள்...
இங்கே யாருக்கும் பயன் இல்லாமல் தானியங்கள் மழையாலோ அல்லது மற்ற காரணங்காளாலோ வீணாகிறது என்று நினைக்கும் போது பாரதியார் போல கோபம் வருகிறது... பாரதியார் தனியொருவருக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்துடுவோம் என்றார்...
ஆனால் விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது என்றால் இந்த தேசத்தை ஆள்பவர்களை எரித்துடுவோம் என்று இன்று பாரதியார் இருந்து இருந்தால் நிச்சயமாக பாடி இருப்பார்...
ஒவ்வொரு விசயத்திற்கும் காரணத்தை தேடி கண்டுபிடித்து மீடியா கேட்கும் கேள்விகளுக்கு சமார்த்தியமாக பதில் சொல்லி விட்டு நகர்ந்து விட்டால் பிரச்சினை தீராது...நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆகி விட்டது.. ஆனால் இங்கே விவசாயிகளுக்கு அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு தான் நாம் இருக்கிறோம்...
மாநில அரசு ஒரு பக்கம் மத்திய அரசை கையை காட்டுகிறது.. ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்யுங்கள் என்று..
மத்திய அரசு ஒரு பக்கம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா அதை செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது..
இது இன்று நேற்று அல்ல...
காலம் காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது..
கடந்த எடப்பாடி ஐயா ஆட்சி காலத்தில் கொள்முதல் செய்ய சாக்கு தேவையான அளவு இல்லை என்று சாக்கு போக்கு சொன்ன காட்சிகள் எல்லாம் இன்னும் மறந்து விடவில்லை...
எது எப்படியோ இந்த விசயத்திற்கு ஒரு தீர்வு வேண்டும்..
நீங்கள் நெடுஞ்சாலை நான்குவழி சாலை எட்டு வழி சாலை எல்லாம் போடுவதை கொஞ்சம் நிறுத்தி விட்டு இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து ஒரு சுமுகமான முடிவு எடுத்து விவசாயிகள் பக்கம் நில்லுங்கள்...
குடோன் கட்டுவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் இல்லை...
உங்கள் பினாமி நிலத்தை கொடுத்தீர்கள் என்றாலே போதும் குடோன் கட்டி விடலாம்...
இந்த தேசம் எப்போதும் விவசாயிகளின் கண்ணீரை பார்த்துக் கொண்டே இருந்தால் அல்லது அவர்கள் தானாகவே தான் நேசித்த நிலத்தை கான்கிரீட் காடுகளாக விற்பனை செய்வதற்கு கொடுக்கும் நெருக்கடிகளை உருவாக்கி விட்டால் அது தான் இந்த தேசத்திற்கு ஆளும் அரசாங்கங்கள் சேர்த்து வைத்த கொடிய பாவம்...
இனியேனும் திருந்துங்கள்
இங்கே அனைத்தையும் அரசியல் மாயாஜால வார்த்தைகளில் அடைத்து வைத்து விட முடியாது...
அனைத்து விவசாயிகள் சார்பாக இந்த தலையங்கம் வெளியிடப்படுகிறது..
#இன்றையதலையங்கம்.
#இளையவேணிகிருஷ்ணா.
#நாள்:#24/10/25.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக