எனக்காக காத்திருந்து களைத்து
சிதைந்து போன
நொடிகளை தேடினேன்
திடீரென ஞாபகம் வந்தவனாக..
அதுவோ கோபித்து
கரைந்து போனது
காலத்திற்குள் என்று
அந்த வாழ்வின் சாட்சி என்னிடம்
கொஞ்சமும் இரக்கமின்றி
சொல்லி விட்டு
விடுவிடுவென்று பயணிக்கிறான்...
நான் அப்படியே அந்த
வாழ்வெனும் சாலையில் உறைந்து
நிற்பதை பார்த்து
பொறுக்காமல் என் மீது சிறிது
அன்பு கொண்ட ஒருவர்
சீட்டு கட்டில் ஜோக்கர் இல்லாமல்
வெற்றி அடைவதும்
சாத்தியமான ஒன்று தானே என்று
சமாதானம் செய்து
அங்கே இருந்த தேநீர் விடுதியில்
ஒரு கோப்பை தேநீர் வாங்கி
தருகிறார்...
அந்த தேநீரின் சில நிமிட சுவையில்
நான் சகலமும் மறந்து
பயணிக்கிறேன்...
இங்கே மரணிக்காத இரவு என்று
ஒன்று இருந்தால் சொல்லுங்கள்...
நான் அதில் மறைந்துக் கொள்ள
கேட்கிறேன் என்று
நினைத்து விடாதீர்கள்...
அந்த இரவிடம் எந்தவித
இடையூறும் இல்லாமல்
இடைவெளி இன்றி
நான் சில பாடங்களை
கற்றுக் கொள்ள வேண்டும் ...
இப்படிக்கு இரவை நேசிப்பவன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:03/10
/25/வெள்ளிக்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக