பக்கங்கள்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

நான் அவன் இல்லை..


ஒரு முழுமையான வெள்ளை 

காகித தாளில் 

எழுத்துக்களால் அலங்கரித்து 

கொண்டு இருக்கிறேன் 

முடிவில்லாமல் 

என்னை பற்றி ...

மை தீர்ந்த பின்பும் நிரப்பி நிரப்பி 

நடுநிசி வரை 

எழுதி தீர்த்து நிதானமாக 

வாசிக்கிறேன்...

அத்தனை வார்த்தைகளிலும் 

என் வாசம் சிறிதும் இல்லை...

நான் வர்ணித்த வார்த்தைகளின் 

வழியே 

என்னை தேடினேன்...

அதுவோ நான் அவன் இல்லை என்று 

துரித கதியில் சொல்லி விட்டு பறந்து 

சென்று அங்கே 

சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் 

நதியில் 

விழுந்ததில் நான் கணக்கற்ற 

வர்ணனையால் அமிழ்ந்த 

அந்த காகிதம் நனைந்து 

மிதந்து சென்றதை அமைதியாக 

வேடிக்கை பார்த்தேன்...

எந்த சலனமும் இல்லாமல் 

பயணிக்கும் அந்த காகிதத்தில் 

தற்போது மை கலைந்து 

அலங்கோலமாக இருந்தும் 

நிச்சலனமாக ஆழ்ந்த அமைதியோடு 

அந்த நதியில் 

பயணிக்கிறது...

ஆம் நான் அவன் இல்லை தான் 

போலும்...

நான் அவனாக இருந்திருந்தால் 

இப்படி பேரமைதயோடு

பயணிக்காமல் பெரும் சத்தத்துடன் 

கரையேற துடித்திருப்பேன் 

அல்லவா...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/08/25/செவ்வாய் கிழமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக