அந்த பேருந்து நிறுத்தத்தின் அரசு இயந்திரம் இயக்கிய காணொளி மூலமாக ஒலித்துக் கொண்டே இருந்தது அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் இனி வரும் சாதனை சார்ந்த விஷயங்கள் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டே இருந்தது அதிகமான சத்தத்தோடு...
பேருந்திற்காக காத்திருந்தவர்கள் சில பேர் அதை வேண்டா வெறுப்பாக பார்த்தார்கள்..பல பேர் அங்கே அப்படி ஒரு காணொளி போய்க் கொண்டு இருக்கிறது என்கின்ற பிரஞ்ஞை கூட இல்லாமல் தமது ஊருக்கான பேருந்து வராதா என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருந்தார்கள் மிகவும் சலிப்போடே...
என்னை போன்ற சொற்ப மனிதர்கள் மட்டுமே அதை கண்டும் காணாமல் அதில் லயித்தும் லயிக்காமல் போவோர் வருவோரை எல்லாம் சற்றே நிதானமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம் ...
விஞ்ஞானம் கையில் வந்து விட்ட காலத்தில் கூட இந்த பெரும்பாலும் கண்டுக் கொள்ளாத அல்லது கண்டுக்கொள்ள மனம் இல்லாத விசயங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை இப்படி அரசு இயந்திர விளம்பரங்களுக்காக செலவு செய்கிறார்களே என்கின்ற ஆதங்கம் என்னை போன்ற அரசியல் பார்வையாளர்களுக்கு இருந்தது...
ஆனால் அந்த ஆதங்கம் எந்தளவுக்கு எல்லோருக்கும் இருக்கிறது அப்படியே இருந்தாலும் அதனால் நமது வரிப் பணத்தை குறைக்க போகிறார்களா என்ன... ஒன்றும் ஆகப் போவதில்லை... நமக்கு கொஞ்ச நேரம் இரத்த அழுத்தம் அதிகமாவது தான் மிச்சமாக இருக்கும் இல்லையா இப்படியே யோசித்துக் கொண்டு இருக்கும் போது எனதருகே ஒரு பெண்மணி தோளில் சிறு குழந்தையை போட்டுக் கொண்டு அமர்ந்தார் அந்த பேருந்து நிறுத்தத்தில்... அந்த குழந்தைக்கு வாகாக பார்க்கும் திசையில் அந்த காணொளி இருந்தது... அதில் வரும் மனிதர்கள் மற்றும் ஆராவாரங்கள் அந்த குழந்தைக்கு ஏதோ ஒரு வேடிக்கை காட்டுவதாகவே இருந்தது.. இமைக் கொட்டாமல் தன் பசியை மறந்து அழுகையை மறந்து அந்த காணொளியை தன்னை மறந்து லயித்து பார்த்துக் கொண்டு இருந்தது அந்த தாயிற்கு சற்றே ஆறுதல் தந்ததில் நான் மக்கள் வரிப்பணம் வீணாவதை சற்றே மறந்தேன்..அதுவரை அழுது ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டு இருந்த தனது குழந்தைக்கு ஏதோவொரு ஆறுதல் எது கொடுத்தது என்று சற்றே திரும்பி பார்த்து சற்றே சலிப்படைந்தாலும் சிறிது ஆறுதலும் அடைந்தார் என்பதை தவிர அந்த காணொளியை அங்கே பலவிதமான உணர்வுகளை பிரதிபலித்தில் அந்த குழந்தையின் கள்ளம் கபடமற்ற சிரிப்பை ரசித்துக்கொண்டே இருக்கும் போது நான் போகும் பேருந்து வந்தது... நான் சற்றே அந்த காணொளியை திரும்பி பார்த்து விட்டு அங்கிருந்து நகர்கிறேன்...இனி இன்னும் அங்கே அநேக பேருக்கு அந்த காணொளி பலபேருக்கு மீண்டும் பலவிதமான உணர்வுகளை கடத்தினாலும் அந்த குழந்தையின் சிரிப்பின் சுவடில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்து சற்றே சிரிப்போடே பயணித்தேன் எனது ஊருக்கு செல்லும் பேருந்தில்.....
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:16/07/25/புதன்
நல்ல முயற்சி.. தொடர்ந்து எழுதுங்கள் படைப்பாளர் அவர்களே..💐💐
பதிலளிநீக்குநிச்சயமாக எழுதுகிறேன்... தங்களது மேலான பேரன்பிற்கு ஆதரவிற்கு நன்றிகள் 🙏. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
பதிலளிநீக்கு