பக்கங்கள்

வெள்ளி, 28 மார்ச், 2025

கடனை தீர்த்து விட்ட நிம்மதியில்...


மனிதர்களின் அகங்காரம் 

அந்தோ எவ்வளவு கொடியது?

இங்கே தற்போது 

பூமியின் ஒரு மூலையில் 

ஏதும் அறியாத மக்களின் 

நாடித் துடிப்பு 

நின்று விட்டது...

அந்தி மயங்கும் வேளையில் 

பறவைகள் வருகைக்காக 

காத்திருந்த சாலை 

விரிவாக்கத்திற்காக 

சாலையோரம் வெட்டப்பட்ட 

மரத்தின் சாபமாக கூட 

இது இருக்கலாம்...

அல்லது அந்த பறவைகள் 

சிந்திய கண்ணீர் துளிகளின் 

வெப்பமாக கூட இருக்கலாம்...

யார் கண்டது இங்கே 

எதுவும் மிச்சம் இல்லாமல் 

கடனை தீர்த்து விட்ட நிம்மதியில் 

எந்தவித சலனமும் இல்லாமல் காலம் நம்மையும் 

ஒரு தீர்க்க பார்வை பார்த்துவிட்டு 

செல்வதில் 

நானும் கொஞ்சம் 

மிரண்டு தான் போனேன்...

நாளை காலத்தின் கணக்கில் 

பலியாவது நானாகவும் 

இருக்கலாம் என்று...

#மியான்மர்நிலநடுக்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக