பக்கங்கள்

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

கேட்பாரற்ற நிலையில் என் நிலையை ஒத்த பொம்மை...


அந்த யாருமற்ற தெருவொன்றில் 

அநாதையாக நடந்து செல்கிறேன்...

கேட்பாரற்ற நிலையில் 

என் நிலையை ஒத்த 

பொம்மை ஒன்று 

அந்த சாலையில் 

எவரோ வீசி எறிந்து விட்டு 

சென்ற போதும் 

நிலை கலங்காமல் 

அங்கே எனை பார்த்து இலேசாக 

சிரித்தது...

அந்த சிரிப்பில் பொய்யில்லை...

ஆயிரம் ஆயிரம் 

பேரன்பு மட்டும் 

மழை சாரலாக 

பொழிந்து எனை அதனை நோக்கி 

இழுத்து சென்றது...

அதன் அருகில் சென்று 

அதை வாரியணைத்த போது 

ஏதோவொரு ஜென்ம பந்தத்தில் 

நாங்கள் இணைந்து இருந்த 

ஆழ் மன நினைவொன்று ஏனோ 

மின்னல் போல எனை ஒரு நொடியில் 

வசீகரித்து 

சென்றதை மட்டும் ஏனோ 

மறக்க முடியாமல் 

போகும் இன்னும் 

வெகு காலத்திற்கு...

இங்கே உணர்வற்ற பொம்மை என்னோடு கொண்ட பந்தத்தில் நான் அநாதை இல்லை என்று 

அந்த சாலையில் பெரும் தாண்டவம் 

ஆடியதை

பார்த்த பறவைகளும்

ஏனோ தனது சிறகை விரித்து 

வானத்தில் ஆடிய தாண்டவம் 

இங்கே எங்களை தவிர 

வேறு எவருக்கும் புரியாது...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/08/24/திங்கட்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக