பக்கங்கள்

செவ்வாய், 4 ஜூன், 2024

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:- ரொம்ப அருமையான முடிவுகள்... அகங்காரம் கொண்டவர்கள் எப்படி அடுத்தவர்களை அனுசரித்து ஆட்சி கட்டிலில் அமர்வார்கள் என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எழுகிறது மக்கள் மனதில்... எப்போதும் ஒரே சித்தாந்தம் தான் இருக்க வேண்டும் அரசியல்வாதிகளுக்கு... அது அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்பதே...

அது சரி இப்போது தான் நான் வாஜ்பாய் கட்டமைத்த கூட்டணி ஆட்சியை நினைவு கூறுகிறேன் இங்கே... எவ்வளவு நல்ல மனிதர்...அவரையே கூட்டணி கட்சிகள் பாடாய்படுத்தி ஒரு வழி செய்து விட்டது அந்த கால கட்டத்தில்... அப்போது எனக்கு பிஜேபி சேர்த்த கூட்டணி கட்சிகள் மீது அவ்வளவு கோபம் இருந்தது... அவர் அவ்வளவு அழகாக அனைவரையும் அனுசரித்து அவரது அரசியல் நகர்வை மிகவும் அருமையாக கட்டமைத்து வழி நடத்தி அந்த கூட்டணி கட்சிகள் கொடுத்த தொல்லைகளுக்கு இடையே நிறைய மக்களுக்காக யோசித்து திட்டங்கள் வகுத்தார்...அவரை போன்ற பொறுமைசாலிகள் அடக்கம் உள்ளவர்கள் தற்போது பிஜேபியில் உறுதியாக இல்லை என்று எங்கே வேண்டும் என்றாலும் வந்து சத்தியத்தை உரைப்பேன்... ஆனால் இப்போது தனிக் காட்டு ராஜாவாக பத்து ஆண்டுகள் ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர்களுக்கு இந்த அனுபவம் மிகவும் புதிது... அதிலும் நிதிஷ் குமார் சந்திர பாபு நாயுடு இவர்கள் காலில் விழுந்து ஆதரவு தேட வேண்டும் என்று மம்தா சற்று முன் தான் பேட்டி கொடுத்து இருந்தார்.. அது இவர்களுக்கு எப்படி சரி வரும் ஏனெனில் எங்கேயும் தலை வணங்கி பழக்கம் இல்லாதவர்கள் இவர்கள்... குதிரை பேரம் பேசி பேசியே பழக்கப்பட்டவர்கள் இவர்கள்... இந்த முறை ஜனநாயக வழியில் செல்வார்கள் என்றால் அது நிச்சயமாக மக்களாகிய நாம் செய்த புண்ணியம் என்று தான் அறுதியிட்டு சொல்வேன்... பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...

ஆனால் ஒன்று இப்போது தான் இந்தியா தனது பழைய அரசியல் தன்மையை புதுப்பித்து பயணிக்கிறது என்று சொல்வேன்..

மேலும் இந்தியாவை பொறுத்தவரை கூட்டாட்சி தத்துவம் தான் சரியான விஷயமும் கூட...

#அரசியல்நகர்வுகள்.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக