எந்த உரையாடலும் அற்ற
அந்த தனிமை அற்புதமானது...
அத்தனை சலசலப்புகளிடமிருந்தும்
ஒரு நிரந்தர விடுதலை அதுவாக இருந்து விட்டு போகட்டுமே என்று கூட
நான் நினைத்தது உண்டு...
ஆசைகள் இச்சைகள் எப்போதும் நம்மை வேறொரு பாதையில் அழைத்துச் செல்ல உறங்காமல் காத்திருக்கும் அந்த நிலையின் இடையூறுகள் என்று சொன்னால் அது மிகையல்ல...
எது எப்படியோ இப்போது கிடைத்த இந்த தனிமை எனும் அமிர்தத்தை நான் அந்த தேவர்களோடும் பகிர்ந்து கொள்ள மனமின்றி
சத்தம் இல்லாமல் பருகுகிறேன்...
எது எப்படியோ
யுகம் யுகமாக இதற்காகவே காத்திருக்கும்
நான் இந்த வாய்ப்பை
நழுவி விடாமல் இருக்க
போராடுவதை கூட தவிர்க்கிறேன்...
ஏனெனில் அந்த போராட்டம் கூட என் அனுபவித்தலை கெடுத்து விடக் கூடாது என்று...
அது நழுவி எங்கே சென்று விட போகிறது...
நான் தீர்மானமாக ஒரு நீண்ட மௌனத்தை
கடைபிடித்து விடும் போது...
எது எப்படியோ அநாதையாக்கப்பட்ட எனது பந்துக்கள் தான் அந்த சூழலை எதிர்த்து போரிட்டு கொண்டு இருக்கிறார்கள்...
அது மகாபாரத போரை விட
கடுமையான சூழ்ச்சி நிறைந்ததாக இருந்தது என்று நான் அந்த அமிர்தத்தை பருகி முடித்து ஒரு யுகம் கடந்த பிறகு
அந்த பார்வையாளர்களிடம் தெரிந்துக் கொண்டேன்...
நல்ல வேளையாக நான் அந்த யுத்தத்தில் பங்கேற்கவில்லை என்று
என்னை நானே ஆறுதல் படுத்திக் கொண்டு
மீண்டும் அந்த தனிமை எனும் அற்புத உலகில் பயணிக்கிறேன்...
#தனிமை
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 14/06/24/வெள்ளிக்கிழமை.
முன்னிரவு பொழுது 8:55.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக