பக்கங்கள்

செவ்வாய், 2 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


அந்தி சாயும் நேரத்தில்

விடியும் வரை இளைப்பாற

ஒரு கிளை தேடி

அலையும் பறவையின் வலியை

இங்கே அந்த உயிரற்ற கட்டிடங்கள்

அறியக் கூடும்...

அந்த வானில் சிறிது நேரம் தோன்றி

மறையும் பிறை நிலவும்

அறியக் கூடும்...

அறிந்தும் பயன் இல்லை

அதன் உயிர் எங்கோ தொலைவில்

காய்ந்த மரத்தில் பயத்தில் 

நடுங்கி கீச்சிட்டு

மெல்லிய குரலில்

தன் குஞ்சு பறவையிடம்

கொண்டு சேர்ப்பார்கள்

யார் இங்கே?

எல்லோரும் உயிரோடு வெறும் மூச்சை

இழுத்து விட்டு 

ஓடிக் கொண்டு இருக்கும்

ஜடங்களாகிய மனிதர்கள் ஆயிற்றே...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக