பக்கங்கள்

வெள்ளி, 29 டிசம்பர், 2023

போற்றுவார் போற்றட்டும்;தூற்றுவார் தூற்றட்டும்...

 


#இன்றைய #தலையங்கம் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இறப்பதற்கு கூடிய கூட்டம் சத்தம் இல்லாமல் இங்கே உணர்த்தி இருப்பது தர்ம சிந்தனை உள்ளவர்கள் தான் எப்போதும் மக்கள் மனதில் நிலைத்து இருப்பார்கள் என்பது தான்...

இங்கே ஒரு கட்சியை தாக்கி தாக்கி பேசுவதால் அரசியலில் வெற்றி பெற்று விடலாம் என்பது முட்டாள்தனம்... சத்தம் இல்லாமல் மக்கள் சேவையில் தன்னலம் இல்லாமல் அர்ப்பணித்து கொண்டவர்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்து நீங்கா புகழ் அடைய முடியும்...

இங்கே ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும்... எவ்வளவு அகங்காரம் கொண்ட மனிதர்களும் ஒருவரின் தர்ம செயல்களால் தலை வணங்க வைக்கப்படுவார்கள் என்று மீண்டும் மீண்டும் இந்த பிரபஞ்சம் நிரூபித்து உள்ளது.. அதற்கு அந்த மத்திய நிதி அமைச்சர் பெண்மணி தலை வணங்கி விஜகாந்திற்கு அஞ்சலி செலுத்தியதே சாட்சி... இங்கே கர்ணனுக்கு முன் பகவான் கிருஷ்ணரே அவர் செய்த தர்மங்களை பிச்சையாக இடுமாறு கேட்கவில்லையா... எப்போதும் இந்த பிரபஞ்சம் தர்ம சிந்தனை கொண்டவர்களால் மட்டுமே நிம்மதியாக சுழல்கிறது என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்...

ஆவணி மாதத்தில் சூரியன் ஆட்சி... அந்த மாதத்தில் உதித்து அந்த சூரியன் போல விருப்பு வெறுப்பின்றி கள்ளம் கபடம் இல்லாமல் ஒரு ஜீவன் இங்கே நம்மில் பயணித்து மறைந்து இருக்கிறது...

அவரின் கோபத்தில் எழுந்த அந்த உணர்ச்சி பிரபாவங்களை மட்டும் வெட்டி ஒட்டி தகிடுதத்தம் செய்தவர்கள் வெட்கப்படுங்கள்...கர்ணனை அவமானம் செய்ததால் அந்த கர்ணனின் புகழ் இங்கே பூமியில் குறையவில்லையே... அப்படி தான் விஜகாந்திற்கு தன்னலம் இல்லாமல் கூடிய கூட்டம் அவரது புகழை அந்த சூரியன் போல எப்போதும் சுடர் விட்டு பிரகாசித்து கொண்டு இருக்கும்...

உண்மையில் தர்ம சிந்தனை கொண்டவர்கள் புகழை சில மக்களின் கீழ்த்தரமான செயல்களால் தோற்கடிக்க முடியாது என்பதை இன்று நிச்சயமாக நிறைய பேர் உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்...

#கேப்டன்விஜயகாந்த்

#புகழாஞ்சலி.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக