என்னோடு இணையத்தில் பயணிக்கும் நேசம் மிகுந்த பிரதிலிபி பெண் எழுத்தாளர் தோழி கல்பனா மோகன்ராஜ் அவர்கள் வெகு காலத்திற்கு பிறகு ஒரு ஹாய் சொல்லி என்னை ஞாபகம் இருக்கிறதா என்று மட்டும் கேட்டு விட்டு போய் விட்டார்.. எனக்கு பெரும்பாலும் என்னோடு பயணிக்கும் எழுத்தாளர் ரசிகர்களை மறப்பது இல்லை.. ஏனெனில் எழுத்து எனது உயிர் மூச்சு.. நான் தங்களை மறக்கவில்லை தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று நலம் விசாரித்து விட்டு கொஞ்சம் குறுந்தகவல் மூலம் பேசினோம்.. நிறைவாக I miss u your voice என்றார்...அடடா இவர் எனது வானொலி நிகழ்ச்சியும் கேட்டு இருக்கிறார் என்று பிறகு தான் ஞாபகம் வந்தது.. நிச்சயமாக தாங்கள் நேரம் கிடைக்கும் போது ஒரு பாடல் பாடி அனுப்பி வையுங்கள் என்று பேரன்போடு கேட்டுக் கொண்டார்.. நிச்சயமாக அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி விடை பெற்றேன்... இப்படி தான் பாருங்கள் நம் மீது எத்தனையோ உள்ளங்கள் நேசிப்பதை நிறுத்தாமல் பெரும் நேசத்தை திகட்ட திகட்ட கொடுத்து விட்டு நொடி பொழுதில் மறைக்கிறார்கள்... ஆனால் அவர்கள் நேசம் மட்டும் எப்போதும் நிலையாக என்னோடு பேசாமல் பேசி எவருக்கும் தொந்தரவு இல்லாமல் பயணிக்கிறது... இது தான் நான் இந்த பிரபஞ்சத்தின் கொடையாக நினைக்கிறேன்.. என் எழுத்துக்கோ குரலுக்கோ இங்கே அதிகாரபூர்வ அங்கீகாரம் தேவையில்லை என்று நினைக்க தோன்றுகிறது இவர்கள் போன்ற பெரும் நேசமிகுந்த தோழமைகளால்...
#கண்மூடித்தனமானநேசம். ❤️
நேரம் மாலை:5:10.
11/08/2023.
#இளையவேணிகிருஷ்ணா.
இவ்ளோப்பெரிய பாராட்ட மிக மகிழ்ச்சி🥰
பதிலளிநீக்குநேசத்தின் அளவு பெரியது தோழி ❤️🥰
பதிலளிநீக்கு