இரவின் நீட்சியை
மனம் நாடி தவம் இருக்கிறது..
ஒரு நட்சத்திர கூட்டத்தின்
உயிரோட்டமான தேடலை
இங்கே என்னால் அவ்வளவு
எளிதில் ஊதாசீனப்படுத்த
இயலவில்லை...
ஒரு வகையான காதல் இது...
இரவை நேசிப்பதற்கு இங்கே பலபேர் பல காரணங்கள் சொல்லலாம்...
எனக்கும் அந்த நட்சத்திர கூட்டத்திற்கும் ஒரே காரணம் தான் இருக்க முடியும்...
நான் எனது பார்வையால் கடத்துகிறேன் என் காதலை
ஒரு நொடியும் வீணாகாமல்..
அதுவும் என் காதலை
உள் வாங்கி கொண்டு
என் காதலை வாங்கி கொள்கிறது...
பேரமைதிக் கொண்ட
இந்த இரவை தவிர
வேறெதுவும் மதிப்பு வாய்ந்ததாக தெரியவில்லை
எங்கள் இருவருக்கும்...
இந்த பிரபஞ்சத்தின் சூட்சம அமைதியை
இங்கே நீங்கள் ரசிக்க மறந்து தவற விட்டு விட்டு
வாழ்வின் வறட்சியை மட்டுமே எதிர் கொள்கிறீர்கள்...
ஆழ்ந்த உறக்கத்தில் கோடான கோடி மக்கள் அடுத்த நாள் கவலையோடு
இமையை மூடி உறக்கத்தை
வலுக்கட்டாயமாக வரவழைத்து
போராடும் போது
நாங்கள் இங்கே இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் வேடிக்கை பார்க்க
காதலோடு கசிந்துருகி லயிக்கிறோம்..
விடை பெறா முடிவில்லாத
இந்த பெருவெளி காதல் பயணத்தை இங்கே யார் புரிந்துக் கொள்ளக் கூடும்??
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக