பக்கங்கள்

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

வெட்டவெளியில் நிலவும் நானும் ✨

 

இப்படி ஒரு பிரகாசமான தேஜஸ் கொண்ட நிலவை நான் பார்த்து நிறைய நாட்கள் ஆகிறது... ஒரு வேளை ஆடி மாதம் கடக ராசியில் சூரியன் இருந்து அந்த கடக ராசிக்கு அதிபதியான நிலவுக்கு தேவையான தேஜஸை கொடுக்கிறார் என்று தான் நினைக்கிறேன்...எது எப்படியோ இந்த நிலவின் பேரொளியில் அது தனது மேல் கிரணத்தை வீச இளம் காற்று மிருதுவாக தீண்டி செல்லும் இந்த அமிர்தமான நேரம் மட்டும் இன்னும் இரண்டு நாட்கள் விடியாமல் நிலவும் எங்கேயும் நகராமல் இப்படியே நாங்கள் ஒருவரையொருவர் நேசித்துக் கிடக்கும் இந்த வெட்டவெளி தருணத்தை சிலாகித்து எழுதி விட முடியாது அவ்வளவு எளிதாக.. இது ஒரு அமிர்தமான தருணம்...

நீங்கள் எவரேனும் தற்போது இந்த வெட்டவெளியில் காயும் நிலவை ரசிக்கிறீர்களா தெரியாது.. ஆனால் நிச்சயமாக இது ஆனந்தமான நிலவொளி எனும் அமிர்தம் பருகும் தருணம் என்றே சொல்வேன்...

#வெட்டவெளியும் #நிலவும் #நானும்...

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 11:53.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக