அந்த மழை இரவில்
உன்னோடு நான் நடந்து வந்த காலத்தை
மீண்டும் மீண்டும்
அசை போடுகிறேன்..
நீ எத்தனை எத்தனை
கதைகளை பேசி குதூகலித்து
விழும் மழைநீரை
கையில் ஏந்தி நடந்தாய்...
அந்த தருணத்தில்
நாம் நனைந்து
இந்த பிரபஞ்சம் மறந்து
இரவின் நிழலில் கொஞ்ச நேரம்
இளைப்பாறி
ஒரு தேநீர் கடையில் தேநீர் பருகி
நீண்ட தூரம் நடந்து
இரவை நொடிக்கு நொடி
ரசித்து கடந்தோம்...
அந்த ஒரு இரவு நீயும் நானும்
வாழ்வின் மொத்த ரசனையையும்
ரசித்து முடித்து விடை பெற்றோம்...
நம்மை காதலர்கள் என்று
அந்த தேநீர் கடைக்காரரோ
அல்லது அந்த இரவோ நினைத்து
இருக்கக் கூடும்..
நாம் இருவரும் அதை ரசித்து
சிரித்து கடந்தோம்..
உண்மையில் நாம் இருவரும்
காதலர்களா என்று
நமக்கு நாமே
கேட்டுக் கொண்ட போது உடனே
நாம் இருவரும்
அந்த எண்ணத்தை மறுத்தோம்...
அப்போது நாம் யார் என்று
மீண்டும் மீண்டும்
கேட்ட போது நீ உடனே பதில்
அளித்தாய்...
நாம் இருவரும் காதலர்களாக
இருந்து இருந்தால்
இந்த இரவை இவ்வளவு
ரசனையோடு
ஒரு சஞ்சலமின்றி கடந்து
இருக்க மாட்டோம்...
நாம் அதீத,
அபூர்வ உணர்வுள்ள இணை...
இந்த பெயரையோ உறவையோ
எவரும் சரியாக கணிக்க தெரியாமல்
அவரவருக்கு தோன்றும் விதத்தில்
நம்மை நினைத்து கொள்கிறார்கள்..
நாம் நம்மை கணிக்க வேண்டுமா
அல்லது
நம்மை நாமே
ரசிக்க வேண்டுமா என்று
நீயே முடிவு செய்து கொள் என்றேன்...
ஒரு ரசனையான இணையின் பயணத்தை இங்கே யார்
அசாதாரணமாக
அதே நிலையில் உணரக் கூடும்?
#அசாதாரண #இணை.
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக