பக்கங்கள்

திங்கள், 3 ஜூலை, 2023

காதலும் வாழ்க்கையும்

 

அறிவியலில் வென்ற ஐன்ஸ்டீன் காதலில் தோற்றது ஏன்? - இது பிபிசி செய்தி.. எனது பார்வையில் காதலில் தோற்பது ஜெயிப்பது என்றெல்லாம் கிடையாது.. ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ள முடியாமல் பிரிகிறார்கள் என்று வேண்டும் என்றால் சொல்லலாம்...

இன்னொரு பார்வையில் ஒரு இம்சை இது என்று உணர்ந்துக் கொண்டு நிம்மதியாக வாழ்வியல் பயணத்தை ஒரு சுதந்திர பறவையாக, ஆனந்தமாக, தனியாக தொடர்கிறார்கள் என்றும் சொல்லலாம்.. இங்கே காதல் என்பது ஒரு உணர்வு...அதை கடந்து பயணிப்பவர்கள் வாழ்வில் பிரகாசிக்கிறார்கள்.. அதில் இருந்து மீள முடியாதவர்கள் அதையே நினைத்து தனது வாழ்வை சூனியம் ஆக்கிக் கொள்கிறார்கள்.. நான் காதலிக்கிறேன் நீ என்னை காதலிக்க வேண்டும் என்று சொல்ல முடியாது.. சொல்லவும் கூடாது.. இயல்பான சேர்தல் பிரிதல் காதலை கடத்தும் ஒரு நினைவாக...

இங்கே சிலாகித்து அதை எழுதுபவர்கள் அதிகம்.. ஆனால் அதை அந்த உணர்வை முழுவதுமாக எழுதுவது சமுத்திரத்தில் அளவை அளவிடுவது போன்றது... காதலையும் தாண்டி இந்த பிரபஞ்சம் வாழ்க்கையில் பல தருணங்களை நமக்கு ரசிக்க நிறைய கொட்டி கொடுத்து இருக்கிறது.. அதில் ரசனையோடு நீந்துங்கள்.. இங்கே ஒரு சில விசயங்களில் வாழ்க்கை முடிந்து போவதில்லை...

#காதலும்வாழ்க்கையும்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக