ஒரு சுவாரஸ்யமான கேள்வி... தற்போது இந்த கேள்வி ஏன் எழுகிறது என்றால் தமிழ் நாட்டில் வெளியே என்று பயணம் செய்ய ஆரம்பித்து விட்டால் எங்கேயும் சர்வ சாதாரணமாக அநாகரிகமான வார்த்தைகள் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் திட்டிக் கொள்வது அதிகரித்து உள்ளது.. ஒரு சாதாரண விசயத்திற்கு கூட மக்கள் மோசமான வார்த்தைகள் பயன்படுத்த கூச்சம் கொள்வதே இல்லை.. ஆனால் அது பொது இடம் என்பதை மறந்து விடுகிறார்கள்.. அங்கே அவர்கள் சண்டை இட்டு கொள்ளும் இடத்தை கடக்கும் போது நமக்கு தான் காது கூசுகிறது.. மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உணர்கிறோம்.. இப்போது இதை எழுதும் போது கூட எனக்கு ஒரு மாதிரி அருவருப்பு தான் எழுகிறது.. சரி விசயத்திற்கு வருவோம்.. இங்கே நீங்கள் எவ்வளவு கடுமையான சண்டையாக இருந்தாலும் மோசமான வார்த்தைகள் பயன்படுத்துவதே இல்லை என்பவர்கள் மட்டும் ஒரு ஆமோதிப்பு பதிலை சொல்லி விட்டு போங்கள்..திட்டுவதற்கு விலங்குகளை பயன்படுத்தி திட்டுவது சுவாரஸ்யமாக சிரித்து கடந்து விடலாம்.. அது ஒரு பிரச்சினை இல்லை... நீங்கள் கடுமையான கோபம் வரும் போது எந்த விலங்கை பயன்படுத்தி எதிராளிகளை திட்டுவீர்கள் என்று இங்கே சொல்லி விட்டு போங்கள்.. அல்லது நான் கடுமையான சண்டையிலும் எந்த ஒரு மோசமான வார்த்தையும் பயன்படுத்துவது இல்லை..குரலை மட்டும் உயர்த்தி பேசி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன் என்று சொல்பவர்களும் இங்கே பதிவு செய்யுங்கள்... நமது மக்கள் பண்பாட்டை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள தான் இந்த பதிவு...
தற்போது அநாகரிகமான பேச்சு அதிகரித்து விட்டதாகவே நான் கருதுகிறேன்.. தங்களது பார்வையில் எப்படி என்று சொல்லி விட்டு போங்கள் நேயர்களே 🙏.
#ஒருகேள்வி #ஆயிரம்பதில்.
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக