பக்கங்கள்

திங்கள், 20 மார்ச், 2023

வாழ்க்கை கற்றுத் தந்த பாடம்


 இன்று நாம் வாழும் வாழ்க்கை இந்த படத்தை போலத்தான் இருக்கிறது.அனைவரும் நம்முடன் இருந்தும் ஒருவரும் இல்லை என்பது போன்ற தோற்றம். நாம் தனித்து விடப்பட்டதாகவே பலசமயம் உணர்கிறோம்.அது உண்மையும் கூட.நாம் சோர்ந்து போகும்போது கை கொடுக்கவேண்டிய உறவுகள் கை கொடுக்காவிட்டாலும் காயப்படுத்தாமையாவது இருக்கலாம்.உடல் உறுப்புகளில் ஏற்படும் காயத்தால் ஏற்படும் வலியைவிட உறவுகள் தரும் காயத்திற்கு வலி அதிகமாக படைத்துவிட்டான் அந்த இறைவன் .உறவுகள் ஊதாசீனப்படுத்தினால் களங்காதீர்கள்.அதற்கு பதில் சொல்வதற்கான காலத்தை இறைவன் நிச்சயம் உண்டாக்குவான்.உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் உயர்ந்த நிலைக்கு வரும்போது உங்களை அவர்கள் கவனிப்பார்கள்.ஆனால் நீங்கள் அதே தவறை செய்யாதீர்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று காட்டுங்கள். அதுவே அவர்களை கூனிகுறுக செய்து விடும்.நாம் ஆனந்தமாக இருக்கும் போது அடுத்தவர்களை ஆனந்தப்படுத்தி பார்ப்பதில் தான் நமது ஆனந்தம் பலமடங்காக பெருகும். இதை உணராதவர்கள் உண்மையான ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. என்ன உறவுகளே நான் சொல்வது உண்மைதானே?

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக