பக்கங்கள்

திங்கள், 16 ஜனவரி, 2023

ஜீவனோடு பயணிக்கும்

 

மாடு என்று சொல்லும் போதே

வேக வேகமாக வாசற்படியை

தாண்டி பார்க்கிறேன்..

அது நான் வளர்த்த மாடாக கூட இருக்கலாமோ என்று

இல்லை என்று பார்த்து விட்டு 

வீட்டின் உள்ளே நுழையும் போது

ஏனோ தெரியவில்லை

அது தற்போது உயிரோடு இல்லை 

என்றாலும்

பரவாயில்லை...

எவரின் கூர்மையான ஆயுதத்திற்கு மட்டும்

பலியாகி இருக்கக் கூடாது என்று 

நினைக்க தோன்றுகிறது...

கூடவே கண்களின் ஓரம்

கண்ணீர்...

அந்த பந்தம் முடிந்து

கிட்டத்தட்ட

இருபது வருடங்களுக்கு 

மேலாகிறது...

இதோ இப்போது இந்த நொடியில் 

நான் அதனோடு

மகிழ்ந்திருந்த தருணத்தை

மீட்டி பார்க்கிறேன்...

அந்த நினைவுகள் ஏனோ

எனக்கு சுகம் கொடுக்கவில்லை...

மேலும் மேலும்

வலியை தான் கொடுக்கிறது..

பந்தம் பெரிதென நான் எப்போதும் 

நினைப்பதில்லை...

எனினும் இந்த மாட்டோடு

நான் கொண்ட பந்தத்தை மட்டும் 

மறக்க முடியவில்லை...

கொன்றால் பாவம்

தின்றால் தீரும் என்று

எவர் சொன்னாலும்

உங்கள் முகம் சிவப்பது 

மட்டுமில்லை..

ஓங்கி நாலு அறை விடத் தோன்றும்...

ஒரு மாடை வளர்த்து பாருங்கள்...

அந்த ஜீவனின் பந்தம்

உங்கள் ஜீவனோடு

பயணிக்கும் அல்லது

பிரிந்து உங்கள் ஜீவனை

சுட்டெரிக்கும்...

#மாட்டுப்பொங்கல்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக