பக்கங்கள்

வெள்ளி, 9 டிசம்பர், 2022

காலமும் நானும்

 

நான் அப்படியே அமர்ந்து இருந்தேன் முற்றத்தில்...கொஞ்சம் வெங்காய பக்கோடா கொறித்து கொண்டே இடையிடையே இஞ்சி தட்டி போட்ட தேநீரையும் சூடாக பருகிக் கொண்டே... குளிர் காற்றை மெய்மறந்து ரசிக்கிறேன்..வானிலையின் தன்மை அப்படி..எல்லோரும் குளிர்கிறது என்று போர்த்திக்கொண்டு படுக்கையில் விழுந்து இருக்க நான் மட்டும் ஏனோ இந்த காலநிலையில் ரசிகையானேன்..என் தோளை பற்றி பிடித்தது யார் என்று திரும்பி பார்த்தால் காலம்..அட என்ன இப்போதெல்லாம் நீ என்னை தேடி அடிக்கடி வந்து விடுகிறாய் என்று கேட்டேன்...எனக்கும் ரசனை இருக்காதா..உன்னோடு சேர்ந்து கொஞ்ச நேரம் இந்த காலநிலையை ரசித்து விட்டு போகலாம் என்று வந்தேன் என்றது..ஒரு நிமிடம் இதோ வருகிறேன் என்று சொல்லி விரைவாக அதற்கு சூடான வெங்காய பக்கோடாவோடு தேநீரை மும் கொண்டு வந்து கொடுத்தேன்..அது மிகவும் ஆர்வமாக வாங்கிக் கொண்டு ரசித்து வெங்காய பக்கோடாவை ருசித்து தேநீரை ரசித்து பருகியது.. இருவரும் அமைதியாக அந்த காலநிலையை ரசித்தோம்..எங்கோ இருந்து வந்த மழைக் கால மேகம் ஒன்று பாடல் இந்த காலநிலையில் கேட்க இதமாக இருந்தது... இப்படியான பாடல்கள் கேட்க கேட்க இனிமை தான் இல்லையா என்றது காலம் என்னிடம்..ஆமாம் காலமே..சில நேரத்தில் சில பாடல்கள் நாம் எநிர்பாராத நேரத்தில் இப்படி வந்து மகிழ்விக்கும் போது கிடைக்கும் சுகமே தனி தான் என்றது..திடீரென வேகமாக வீசிய காற்று நின்றது..ஆழ்ந்த இந்த இரவின் அமைதி ஏதோவொரு ஆவலை எங்களை தூண்டியது..நாங்கள் இருவருமே இதை பார்த்து கொஞ்சம் ஆச்சரியம் அடைந்தோம்..என்ன நடக்கிறது இங்கே காலமே என்றேன் ஆவலாக..நானும் உன்னை போல தான் ஆச்சரியமாக பார்க்கிறேன் எனது ஆருயிர் தோழியே என்றது..கொஞ்ச நேரம் நாங்கள் நடக்கும் அந்த காலநிலை மாற்றங்களை ரசித்து இருந்தோம்..திடீரென காலம் என்னிடம் ஏதாவது இந்த சூழலுக்கு தகுந்தார் போல ஒரு கவிதை சொல்லேன் என்றது..கவிதையா..மீண்டும் மீண்டும் மீண்டும் ஏன் இந்த சோதனை உனக்கு என்றேன் சிரித்துக்கொண்டே 😊?அட சொல்லேன்..என்றது.. கொஞ்சம் கொஞ்சலாக..சரி சரி சொல்கிறேன்.. என்றேன்.. புயல் வரும் நேரத்தில் நிகழ்கால கவிதை 🍁

இதோ இன்னும் சில மணிநேரங்களில்

கரை கடந்து விடும்

அந்த புயல்...

என் மனதில் சுற்றிக் கொண்டு இருக்கும்

உனது காதல் எனும் புயலை

கடக்க தான்

கரை தேடி அலைகிறேன்...

எக்காலம் கரை சேருமோ...

அட எவ்வளவு அழகான கவிதை இது என்று கைத்தட்டி சபாஷ் சொன்னது..

மீண்டும் நாங்கள் இருவரும் அமைதியானோம்..

இங்கே கொஞ்சம் கொஞ்சமாக சாரலாக மழை வர தொடங்கியது.. இப்போது இன்னும் ஆழ்ந்த அமைதியில் அந்த காலநிலையில் லயித்து கிடந்தோம் எங்களை மறந்து..

#காலமும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

3 கருத்துகள்: