பக்கங்கள்

சனி, 17 டிசம்பர், 2022

வானரத்திடம் இருந்து நான் கற்றுக் கொண்டது


 வானரத்திடம் இருந்து நான் கற்றுக் கொண்டது.. எந்த சூழலிலும் ரசனையோடு இருப்பது தான்.. காலையில் அது உற்சாகமாக எங்கள் வீட்டின் மாடியில் இருந்து நடந்து செல்லும்.. அப்போது மாடியில் அழகாக உடல் உறுதிக்காக யோகாவும் செய்யும்.. இன்றைய உணவை பற்றி அது கவலைப்பட்டதே இல்லை அது முக்கியமாக எனக்கு அதனிடம் இருந்து பிடித்த விசயம்.. எப்படியோ உணவு கிடைத்து விடும் என்கின்ற நம்பிக்கை அதற்கு அதிகம்.. மேலும் அன்றைய நாளில் உணவே கிடைக்கவில்லை என்றாலும் அதற்காக கவலைப்படாமல் வழியில் உள்ள இலை தளைகளை சுவாரஸ்யமாக பறித்து சாப்பிட்டு விட்டு மாலையில் என்னிடம் வம்பு இழுத்து விட்டு ஒரு திருப்தியோடு போய் மரத்தில் அடைக்கலம் ஆகிவிடும்.. அந்த அழகை பார்க்க கண் கோடி வேண்டும்.. கோடைக்காலத்தில் நான் மாடியில் வெளியே படுத்து இருந்தால் விடியற்காலையில் குட்டி 🐒 குரங்குகள் செய்யும் சேஷ்டைகள் சொல்லி மாளாது.. நாம் தலையோடு போர்வையை போர்த்தி படுத்து இருந்தால் போர்வையை பிடித்து இழுத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல கைப்பிடி சுவரில் போய் அமர்ந்து என்னை பார்க்கும் பாருங்கள்.. அப்படியே கொஞ்சம் கோபமும் கொஞ்சம் சிரிப்பும் வரும்.. கொஞ்சம் தாமதமாக எழுந்தால் இப்படி தான்.. தாமதம் என்றால் சற்று விடியற்காலை #ஐந்து #ஐம்பது மணி 😊..

இன்னும் 🐒 குரங்குகள் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்..

#இன்றைய #சுவாரஸ்யமான #விசயம்.

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்: