பக்கங்கள்

வியாழன், 22 டிசம்பர், 2022

ஆஞ்சநேயர் ஜெயந்தி அலப்பறைகள்

 

இன்று பாருங்கள் மார்கழி அமாவாசை திதி மற்றும் ஆஞ்சநேயர் அவதரித்த நாள்.. இந்த நாளில் எங்கள் ஊரில் உள்ள மலை மீது உள்ள ஆஞ்சநேயருக்கு மிகவும் சிறப்பாக பூசைகள் தடபுடலாக நடக்கும்.. அங்கே அந்த ஆஞ்சநேயருக்கு குறிப்பிட்ட நபர் தான் வடை செய்து கொடுக்க வேண்டும் என்று அங்கே மற்ற யாரையும் வடை செய்ய விட மாட்டார்கள்.. அப்படி அங்கே குறிப்பிட்ட நபரின் கையால் வடை செய்து பூசை எல்லாம் செய்வார்கள்.. பிறகு அங்கே பூசை செய்யும் இடத்தில் வானரத்தை விரட்ட ஒரு ஆளையும் நியமிப்பார்கள்.. ஏனெனில் பூசைக்காக வைத்திருக்கும் வடை வாழைப்பழம் இவற்றை வானரம் தூக்கி கொண்டு போய் விடக் கூடாதாம்.. இதை எல்லாம் பாவமாக அங்கே கூர்ந்து கவனித்து வரும் வானரங்கள் எப்படியோ நமக்கு கொடுப்பார்கள் என்று பார்த்து பார்த்து கண்கள் ஓய்ந்து சோர்ந்து போய் உட்கார்ந்து இருக்கும்.. எப்படியோ காலையில் இருந்து ஆஞ்சநேயருக்கு செய்த பூசையை ஒரு பனிரெண்டு மணிக்கு முடித்து விட்டு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஒரு பத்தி மட்டும் குத்தி வைத்திருக்கும் வாழைப்பழத்தை போனால் போகுதே என்று விட்டு விட்டு இறங்குவார்கள்.. இறங்கும் போதும் அங்கே இவ்வளவு நேரம் பார்த்து கொண்டு இருக்கும் அந்த #வானரத்திற்கு எதுவும் தர மாட்டார்கள்.. பிறகு எவரோ ஒருத்தர் கருணை மிகுந்து எவருக்கும் தெரியாமல் அந்த பூசை செய்த வடையில் இருந்து ஒன்றை தூக்கி போடுவார்.. அங்கே ஆயிர கணக்கில் இருக்கும் வானரம் அடித்துக் கொண்டு அங்கே ஒரு பெரிய யுத்தமே நடக்கும்.. ஆனால் அதை பற்றி கவலைப் படாமல் மலையில் இருந்து கீழே வந்து அன்னதானம் அங்கே ஊர் மக்களுக்கு போடுவார்கள்.. அந்த மக்கள் ஏதோ இலையில் கொஞ்சம் நஞ்சம் எதையும் விட்டு வைத்திருக்கிறார்களா என்று இலையில் தேடும் அந்த வானரங்களை பார்த்தால் தான் பாவமாக இருக்கும்..

நன்றாக சாப்பிட்டு விட்டு கொஞ்சம் நேரம் ஓய்வாக எல்லோரும் ஓய்வாக பேசி விடை பெறும் போது ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று சொல்லி செல்வதை பார்த்து அந்த கொலை பசியோடு இருக்கும் வானரங்கள் என்ன நினைக்கும்???நீங்களே சொல்லுங்கள் மக்களே 😔😒🤔

#அனுமன்ஜெயந்திஅலப்பறைகள்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக