பக்கங்கள்

திங்கள், 21 நவம்பர், 2022

வங்கிகளோடு ஒரு போராட்டம்

 


இன்றைய தலையங்கம்:- வங்கியில் பணம் இருந்தால் நாம் அனுபவிப்பதற்குள் ஏதேதோ சொல்லி தொகையை வங்கிகள் எடுத்து விடுகிறது.. ஏடிஎம் கார்டு ஒரு முதியவர் பயன்படுத்துவோர் மிகவும் குறைவான நேரத்தில் தான் பயன்படுத்துகிறார்.. ஆனால் அதற்கு வருடாவருடம் பராமரிப்பு செலவு என்று வங்கி எடுத்துக் கொள்கிறது.. இன்னும் இன்னும் எதற்காக பணம் போகிறது என்றே தெரியவில்லை பலபேருக்கு.. அன்றொரு நாள் வங்கிக்கு சென்ற போது ஒரு பெண்மணி கொஞ்சம் செலவுக்கு பணம் எடுத்து கொண்டு போகலாம் என்று வந்திருந்தார்.. ஆனால் அவர் கணக்கில் இருந்த சொற்ப பணத்தையும் ஏதேதோ செலவு கணக்கு காட்டி கழித்து இருக்கிறார்கள்... சொல்ல போனால் நீங்கள் தான் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லாத குறையாக... அந்த பெண்ணிற்கு மயக்கமே வந்து விட்டது..ஏழை மக்கள் பாவம் கூலி வேலைக்கு போய் வங்கியில் சிறிது சிறிதாக சேமித்து வங்கியில் போட்டு வைத்தால் அந்த பணத்தை பாதுகாத்து கொடுக்க வேண்டிய வங்கியே கொள்ளையடித்தால் பாவம் மக்கள் என்ன செய்வார்கள்.. அதனால் அந்த காலத்தில் வயதான பாட்டிகள் வைத்திருக்கும் #சுருக்குபை தான் சிறந்த பாதுகாப்பு பெட்டகம் என்று உணர்ந்து விடுவதே நல்லது.. ஆனால் அதுவும் கொள்ளை போகும் என்பது வேறு விசயம்..
அதற்கு தான் எதற்காக பணத்தை சம்பாதித்து அதற்கு வரி ஒன்று கட்டிக் கொண்டு தேசாந்திரியாக மக்கள் அனைவரும் கையில் ஒரு திருவோடு எடுத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை..
எனக்கென்னவோ மக்கள் சிறிது காலத்தில் அதை பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று தான் தோன்றுகிறது..
நான் ஏற்கனவே அந்த மனநிலைக்கு வந்து விட்டேன் 😜.
#வங்கிகளோடு #ஒரு #போராட்டம்
#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக